குண்டு ஆண்களை விரும்பும் பெண்கள்

Loading...

‘பெண்களைக் கவரும் கட்டழகன்’ என்ற வாசகம் வந்தாலே நமக்கு ‘சிக்ஸ்பேக்’ ஆண்கள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.

ஆனால் தற்போது ‘டிரெண்டு’ மாறிவருகிறது. குண்டு ஆண்களையும் பெண்கள் விரும்பத் தொடங்கியிருக் கிறார்களாம்.

குறிப்பாக, இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான இளம்பெண்களுக்கு, கட்டுடல் தோற்றம் உடைய ஆண்களை விட அதிக எடையுள்ள குண்டான ஆண்கள் மேல்தான் அதிகம் விருப்பம் உள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று, இளம்பெண்கள் எந்த விதமான தோற்றம் உடைய ஆண்களை மிகவும் விரும்பு கிறார்கள் என தெரிந்துகொள்ள சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

18 வயது இளம் பெண்கள் மற்றும் அதற்கு மேல் வயதுடைய சுமார் 2,544 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

பெண்கள் ‘சிக்ஸ்பேக்’ வயிற்றுடன், திடமான கைகள் மற்றும் தோள்கள் உடைய ஆண்களையே விரும்புவார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

ஆனால், இந்த கருத்துக்கு நேர் எதிராக சுமார் 38 சதவிகித பெண்கள் தங்களுக்கு கரடி போன்று குண்டான வயிறு மற்றும் அதிக எடையுடைய ஆண்களையே மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என பெண்களிடம் கேள்வி எழுப்பியபோது, கட்டுடல் ஆண்களை விட குண்டான ஆண்கள்தான் தங்கள் அழகையும், பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்து புகழ்வார்கள் என கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், குண்டான ஆண்கள் பெண்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்துக்கொள்வார்கள் என்பதாலேயே அவர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆடை நிறுவனத்தின் நிர்வாக இயக் குனரான டேரல் பிரீமேன், எந்த மாதிரியான ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புள்ளிவிவரத்தின்படி, குண்டான, அதிக எடையுடைய ஆண்கள் 38 சதவீத பெண்கள் விரும்புகின்றனர். அதேவேளையில், கட்டுடல் தோற்றம் உடைய ஆண்களை 21 சதவீதம், ஆறடி உயரத்துக்கு மேல் உள்ள ஆண்களை 13 சதவீதம், அதற்கு சற்றுக் குறைவான உயரமுள்ள ஆண்களை 10 சதவீதம், ஒல்லியான, குள்ளமான தோற்றமுள்ள ஆண்களை 9 சதவீதம் பெண்கள் விரும்புவதாக மனம் திறந்துள்ளனர்.

ஆக, குண்டு ஆண்களும் சந்தோஷப்பட காரணம் உண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *