உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ்.

உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் கடுமையான டயட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைக்க முயல்வது ஆபத்தானது. ஆனால் அன்றாடம் ஒருசில எளிய விஷயங்களைப் பின்பற்றி வந்தால், உடல் எடை வேகமாக குறைவதோடு, ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

இங்கு உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதோடு, உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் முடியும்.

கறிவேப்பிலை
காலையில் எழுந்ததும் சிறிது கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதைக் காணலாம்.

மிளகுத் தூள்
ஒரு டம்ளர் நீரில் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் குடித்து வர, உடல் எடை குறையும்.

தக்காளி
காலையில் உணவு உண்பதற்கு முன் ஒரு தக்காளியை உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

பூண்டு
தினமும் காலையில் 2 பல் பூண்டை பச்சையாக உட்கொண்டு வர, அதில் உள்ள உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உட்பொருள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.

எலுமிச்சை ஜூஸ்
காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சாறு சேர்த்து கலந்து குடித்து வர, உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகி உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

Originally posted 2016-02-16 06:44:27. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *