உடல் ஆரோக்கியத்திற்கு 2 வகையான உடற்பயிற்சிகள்

உடல் ஆரோக்கியத்திற்கு 2 வகையான உடற்பயிற்சிகள் மிகவும் நல்லது. அவை அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises) , தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training).

1. அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises) : இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்திற்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், காற்பந்தாட்டம், ஹொக்கி, தனி டெனிஸ், தற்காப்பு கலைகள்(martial arts ), வேகமான நடனம் போன்றவை) ஆனால் நடுத்தர வேகத்தில் (வேகமான நடை, நீச்சல், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இரட்டையர் டெனிஸ், சைக்கிள் ஓட்டம் போன்றவை) செய்வதானால் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஓரிரு நாட்களில் அத்தனை பயிற்சியையும் செய்து முடிப்பதை விட வாரத்தில் 5 முதல் 7 நாட்களுக்கும் பிரித்துச் செய்வது நல்லது. கடுமையானது மற்றும் நடுத்தரமானது ஆகிய இரண்டையும் கலந்து செய்பவர்களும் உண்டு.

2. தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training) : இவற்றை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது செய்ய வேண்டும். உதாரணமாக எடை தூக்குதல், மலை ஏறுதல், கொத்துதல் போன்ற கடுமையான தோட்ட வேலை, உடற்பயிற்சி இயந்திரங்களில் பயிற்சி போன்றவை. யோகாசனமும் இவ்வகையைச் சேர்ந்ததே. எனவே, சிறிய அளவிலான உடற்பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும். எடையையும் குறைக்க விரும்பினால் பயிற்சிகளை வாரத்தில் 300 நிமிடங்களாவது செய்ய வேண்டும். அதாவது சராசரியாக தினசரி 45 நிமிடங்கள் தேவைப்படும்.

[img]http://mmimages.maalaimalar.com/Articles/2016/Feb/8b8be90c-aae7-4201-9d92-643bd8536f4f_S_secvpf.gif[/img]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *