வல்லாரையின் மருத்துவச் செயல்பாடுகள்!!

சூழ்நிலைகளுக்கேற்ப மனோநிலையை மாற்றிக் கொள்ளும் பலத்தைத் தரும் சிறப்பு கொண்டதாக வல்லாரை விளங்குகிறது. மனோநிலையை மாற்றும் Adaptogens என்ற மருத்துவ வேதிப்பொருட்கள் வல்லாரையில் மிகுதியாக அடங்கியதே இதற்குக் காரணம். இதனால் மன உளைச்சலை வெல்லும் உடல்நிலை மாற்றத்தைத் தருவதாக வல்லாரை அமைகிறது.

* பரபரப்பான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, வெப்பம், குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றங்களாக இருந்தாலும் சரி. அதற்கு ஏற்ப நம்மைத் தேற்றிக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வல்லாரை உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலங்களுக்கு அமைதி தருவதுடன், ரத்தநாளங்களில் அடைப்புகள் வராமலும் ரத்த ஓட்டம் தடைபடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் வல்லாரை மருந்தாகிறது. பல்வேறு நோய்களைத் தீர்த்து சுகம் தரும் ஆன்டிபயாட்டிக் பணியையும் திறம்பட செய்கிறது வல்லாரை.

* உடலில் சேர்ந்து துன்பம் தரக்கூடிய நச்சுப் பொருட்களை நீக்கி சுகம் தருகிறது. மலமிளக்கியாக விளங்குகிறது. சிறுநீரை சீராக வெளித்தள்ளுவதற்கும் உதவுகிறது. தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டிச் சீர் செய்கிறது. குறைவான மாதவிலக்கு எனும் குறைபாட்டை நீக்கி முறையாக நடைபெறும்படி தூண்டிவிடுகிறது.

Originally posted 2016-01-27 14:17:13. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *