கர்பத்தை தடுக்கும் நீர்க்கட்டிக்கு தீர்வு

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது,

பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள் உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும்.

இந்நோயானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் சீரற்றநிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இது கருமுட்டை வெளிப்படாத சூழ்நிலையையும் ஏற்படுத்தும். முகம் மற்றும் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக இந்நோய் ஏற்படின் கர்ப்பம் அடையும் நிலை மிகவும் குறைவு.

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அதிக எடை, முகத்தில் அதிக முடி, மாதவிடாய் தடங்கல் ஏற்படும். இந்நோய் தாக்கத்தால் கருப்பையை சுற்றி பல நீர்க்கோவைகள் இருக்கும்.

இதனால் கருமுட்டை வளர்ச்சியடையாத சூழ்நிலை ஏற்படும். இப்பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண்களிடம் அதிகம் உள்ள ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். எனவே தான் முகத்தில் முடி அதிகம் வளருகிறது.

தகுந்த காரணம் துல்லியமாக தெரியா விட்டாலும் பல காரணங்களின் கூட்டு விளைவினால் தான் இது ஏற்படுகிறது என கருதப்படுகிறது. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், பரம்பரையில் உள்ளவர்களிடம் இந்நோய் இருத்தல், ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் அதிகம்சுரப்பது.

சீரற்ற மாதவிடாய், கருமுட்டை வெளியேறாத சூழ்நிலை, முகம், மார்பு, வயிற்றில் அதிக ரோமம் வளருதல், கழுத்து, முகத்தில் கறுப்பான திட்டுகள், கழுத்தை சுற்றி கருமை நிறம் காணப்படுதல்.

மார்பகம் சிறுத்து இருத்தல், குரலில் கரகரப்பும், ஆண் குரலை சார்ந்தும் இருத்தல். தலை முடி மெல்லியதாக இருக்கும். முகப்பரு, எண்ணெய் பதம் உள்ள முகம், அதிக எடை, இடுப்பு வலி, கோபம், மனஅழுத்தம் தென்படும்.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பபை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தூக்கத்தில் குறட்டை, கர்ப்பம் ஏற்பட்டாலும் எளிதில் கரு பதியாத படிகருகலையும்.

இரத்தத்தில் தைராய்டு, சர்க்கரை, கொழுப்பு, எப்.எஸ் ஹெச்,எல்.ஹெச் ஆகிய பரிசோதனைகள், அல்ட்ரா சவுன்ட்ஸ்கேன், பெல்விக்லேப்ராஸ்கோபிக்.பெண்ணிற்கு பெண் சிகிச்சை வேறுபடும். அறிகுறி, வயது, எதிர்கால கருவுறுதல் போன்றவற்றுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கருத்தடைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள், ஆன்ட்ரோஜனை குறைக்கும் மருந்துகள், முடி வளராமல் இருக்க மருந்து, முகப்பருக்களுக்கான சிகிச்சை, அறுவை சிகிச்சையாக பெல்விக் லேப்பராஸ் கோபிக் மூலம் நீர்க்கோவைகளை அகற்றி கரு முட்டையை வெளியேற வைத்து கர்ப்பமடைய செய்தல்.

வஸ்தி, உத்தரவஸ்தி, விரேச்சனம், வமணத்தின் மூலம் குணமடைய செய்ய முடியும். அமுக்கறை, எள், ஆமணக்கு எண்ணெய், தண்ணீர் விட்டான் கிழங்கு, சீந்தில், மந்தாரை, சதபுஷ்பம், நல்ல மிளகு, திரிபலா, மாவிலங்கம், ஆலுவேரா (கற்றாழை), வெந்தயம், அசோகா, வில்வம்பட்டை, திப்பிலி, கண்டங்கத்தரி, குமிழ்தேக்கு, குகுலு, முக்கிரட்டை ஆகியவற்றினால் செய்யப்பட்ட மருந்து.

தேக்கரண்டி அளவு மல்லி பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து தினம் இரு வேளை அருந்தலாம். வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்ணலாம்.

10 துளசி இலையை தினமும் சாப்பிடலாம். பாகற்காய், நெல்லிக்காய் சம அளவு எடுத்து கலந்து சாப்பிடலாம். அடிவயிற்றில் ஆமணக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்யலாம். ஒரு டீஸ்பூன் ஆளிவிலை பால் கலந்து ஊறவைத்து உட்கொள்ளலாம்.

சத்தான கார்போஹைடிரேட் குறைவுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ஆன்ட்ரோஜன், உடல் எடை குறையும். மதுபுகையிலை, புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.

10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். இது தவிர இங்கு கூறப்படாத ராஜவைத்தியம் ஆயுர்வேதத்தில் உள்ளது. இந்த ஆயுர்வேத சிகிச்சையை கடைபிடித்தால் வாரிசு இல்லை என்கிற குறையும் தீரும். ஆயுளும் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *