மார்பகங்களின் அளவை பெரிதாக்க சில எளிய இயற்கை வைத்தியங்கள்!

பெண்களுள் சிலர் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க கஷ்டப்பட்டாலும், சிலர் அதன் அளவை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக சில பெண்கள் சர்ஜரி செய்யவும் நினைக்கின்றனர்.

ஆனால் மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிம்பிளான பல இயற்கை வழிகள் இருக்க, ஏன் சர்ஜரிக்கு செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் மார்பகங்களின் அளவை அதிகரிக்க நினைத்தால், இங்கு ஒருசில அட்டகாசமான எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் படித்து பின்பற்றி வாருங்கள். இதனால் பலனை தாமதமாக பெற வேண்டியிருந்தாலும், பிற்காலத்தில் நல்ல அழகான மார்பகங்களைப் பெறலாம். மேலும் இந்த வழிகளைப் பின்பற்றினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

மார்பக மசாஜ்
மார்பகங்களின் அளவை பெரிதாக்க தினமும் தவறாமல் மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.

உடற்பயிற்சி
மார்பக தசைகளை மையமாக கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் அனைத்தும் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வால் பிரஸ்
சுவற்றில் கைகளை வைத்து, முன்னும் பின்னும் என 10 நொடிகள் தொடர்ந்து செய்ய வேண்டும. இப்படி தினமும் இந்த உடற்பயிற்சியை 20 முறை காலை, மாலை என செய்து வர, எதிர்பார்க்கும் நன்மையைப் பெறலாம்.

பக்கவாட்டில் வளைதல்
நேராக நின்று கொண்டு, ஒரு கையை இடுப்பிலும் மற்றொரு கையை உயர்த்தியும், பக்கவாட்டில் வளைய வேண்டும். இப்படி ஒரு பக்கம் 10-15 முறை என இரண்டு பக்கமும் செய்ய வேண்டும். இப்படி அன்றாம் 10 நிமிடங்கள் மாறி மாறி, மறக்காமல் செய்து வந்தால், மார்பக தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.

வீட்டு வேலைகள்
எவ்வளவு எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தாலும், மார்பகங்களின் அளவு அதிகமாக வேண்டுமெனில், வீட்டு வேலைகளான வீட்டை துடைத்தல், உரலில் மாவு அரைத்தல் போன்ற வேலைகளை செய்து வந்தால், கைகளின் அதிகப்படியான அசைவால் மார்பகங்கள் வளர்ச்சி அடையும்.

ஈஸ்ட்ரோஜெனிக் உணவுகள்
மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம். எனவே ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.

ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள்
ஆரோக்கியமான கொழுப்புக்கள் கூட மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும். எனவே ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான முட்டைகள், அவகேடோ, நட்ஸ், ஆலிவ் ஆயில், மீன், வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை அன்றாடம் உட்கொள்வதோடு, உடற்பயிற்சியையும் செய்து வர, மார்பகங்களில் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

முள்ளங்கி
முள்ளிங்கி சாப்பிட்டால், மார்பகங்களின் அளவு அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் முள்ளங்கியானது மார்பகங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மார்பகங்களின் அளவை விரைவில் அதிகரிக்க உதவும்.

மார்பகங்களை எடுப்பாக காட்டும் உடைகள்
மார்பகங்கள் பெரியதாக காணப்பட வேண்டுமெனில், அதனை எடுப்பாக வெளிக்காட்டும் உடைகளை அணிய வேண்டும். மேலும் சிறியதாக மார்பகங்கள் உள்ளவர்கள் பேடட் பிரா மற்றம் உடைகளை அணிந்து வருவதன் மூலம், மார்பகங்களை பெரியதாகவும், அழகாகவும் வெளிக்காட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *