உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி பயன் தருகிறது என தெரியுமா?

வருடம் முழுக்க கிடைக்கும் ஓர் பழவகை தான் வாழைப்பழம். எண்ணற்ற வகைகள் கொண்டிருக்கிறது வாழைப்பழம். பலரும் காலைக்கடனை கழிக்க இரவிலே ஒரு வாழைப்பழத்தை உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உண்மையில் இதில் இருக்கும் நார்ச்சத்து தான் செரிமானத்தை சரி செய்து மலம் கழிப்பதில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.

இதில் கலோரிகள் அதிகம் தான் ஆனால், உடற்சக்தியை ஊக்குவிக்கும் தன்மையும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இதனால், நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட பயனளிக்கிறது வாழைப்பழம். இனி, வாழைப்பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறதா எனவும், மேலும் வாழைப்பழத்தின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காணலாம்….

சர்க்கரை அபாயம் உள்ளதா வாழைப்பழம்?

இது உண்மை தான் வாழைபழத்தில் நிறைய கலோரிகள் உள்ளன. பெரும்பாலும் இவை இதிலிருக்கும் பிரக்டோஸில் (சர்க்கரை) இருந்து தான் வருகிறது. ஆனால், வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்தும் கலந்திருப்பதால் உயர் இரத்த சர்க்கரை அளவை இது கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

அதிக நேர உடற்சக்தி

வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மெல்ல, மெல்ல உடற்சக்தியை வெளிப்பட செய்ய உதவுகிறது. இதனால் நீண்ட நேரம் பயிற்சி செய்ய, உடற்சக்தியுடன் இருக்க இது உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

வாழைப்பழத்தில் வைட்டமின், மினரல்ஸ், ஆன்டி- ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து, டிரிப்தோபன் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம்

உடற்பயிற்சி அல்லது விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் 10 -15 நிமிடங்களுக்கு முன்னர் மற்றும் பயிற்சி முடித்த 10 – 15 நிமிடங்கள் கழித்து வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நிறைய உடற்சக்தி கிடைக்கிறது.

எவ்வளவு வாழைப்பழம் சாப்பிடலாம்?

அதிகபட்சம் ஒரு நாளுக்கு இரண்டு வாழைப்பழம் போதுமானது. இதில் கலோரிகள் அதிகம் என்பதால் அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும். 8 அங்குலம் உள்ள ஓர் வாழைப்பழத்தில் 120 கலோரிகள் வரை இருக்கிறது.

உடல் எடை அதிகரிக்குமா வாழைப்பழம்?

அளவை மீறாமல் வாழைப்பழம் உட்கொள்ளும் வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. அளவை மீறி உண்ணும் போது ஆரோக்கிய உணவுகளும் கூட உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைந்துவிடுகிறது.

வைட்டமின் சி

காயங்கள் ஆறவும், சேதமடைந்த செல்கள், திசுக்கள் வளரவும் உதவுகிறது.

வைட்டமின் பி 6

நரம்பு மண்டலத்தை பாதிப்பு ஏற்படாமல் பராமரிக்க இது உதவுகிறது.

மாங்கனீசு

மூளையின் செயல்திறன் மற்றும் புதிய திசுக்களின் உருவாக்கம் போன்றவைக்கு இது உதவுகிறது.

பொட்டாசியம்

இதயம் மற்றும் செரிமான மண்டலம் சீராக செயல்பட இது உதவுகிறது.

நார்ச்சத்து

செரிமானம் பாதிப்படையாமல் இருக்க, உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது.

பயோட்டின்

சருமம், கண்கள், முடி, கல்லீரல் மற்றும் பல உடல் பாகங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க இது உதவுகிறது.

[img]http://tamil.boldsky.com/img/2016/01/18-1453098333-12shouldyoueatbananasifyouaretryingtoloseweight.jpg[/img]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *