உங்கள் குழந்தை ரொம்ப அழுகிறதா? சிரிக்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது.

சில நேரங்களில் குழந்தைகள் திடீரென அழத் தொடங்கும். ஏன் காரணம் இல்லாமல் அழுகிறது என நாம் நினைப்பதுண்டு. ஆனால் இதற்கு பல காரணங்கள் உள்ளன.

குழந்தையை அழுவதற்கான காரணங்கள்

கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

குழந்தையின் தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.

தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம். இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு அலசினால் பொடுகு குணமாகும்.

அழும் குழந்தையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்

சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும். அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும்.

இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும்.

பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *