பெண்களுக்கு ஏற்படும் முலைக்காம்பு சார்ந்த பிரச்சனைகள்!!!

பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை என்றால் அது மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் தான். அதற்கடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பது கருப்பைவாய் மற்றும் மார்பகம் சார்ந்தவை தான். மார்பக புற்றுநோய் என்று மட்டுமில்லாமல், பெண்களுக்கு முலைகாம்பு சார்ந்த பிரச்சனைகளும் நிறைய ஏற்படுகின்றன.

எப்படி ஆண்களுக்கு ஆணுறுப்ப சார்ந்த பிரச்சனைகளை வெளியே கூற சங்கோஜமாக இருக்கிறதோ, அப்படி தான் பெண்களுக்கு முலைகாம்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து வெளியே கூற சங்கோஜமாக இருக்கும். ஆனால், முலைகாம்பில் ஏற்படும் சில மாற்றங்கள் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதால், பெண்கள் இது சார்ந்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கூடுதல் முலைக்காம்பு
இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட மிகவும் அரிதாக ஏற்படும் பிரச்சனை. ஒருசிலருக்கு ஏதேனும் ஓர் முலைக்காம்புக்கு அருகாமைல் கூடுதல் முலைக்காம்பு இடம்பெற்றிருக்கும். கூடுதல் முலைக்காம்பு இருப்பது உடல்நலத்துக்கு எந்த கேடும் விளைவிக்காது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முலைக்காம்பு பகுதியில் முடி முளைப்பது
உங்கள் முலைக்காம்பிணை சுற்றி முடி முளைத்து வருகிறது எனில், இது பல்பையுரு கருப்பை நோய்க்குறி (polycystic ovary syndrome) பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஸ்கேனிங் முறையில் இதனை எளிதாக ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியும்.

தலைகீழான முலைக்காம்பு
ஒரு சிலருக்கு முலைகாம்பு தலைகீழாக காணப்படும். வருந்தும் அளவிற்கு இது பிரச்சனை இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், திடீரென முலைகாம்பு தலைகீழாக மாறுவது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம், எனவே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

முலைக்காம்பு பகுதியில் செதில் / வெடிப்பு
முலைக்காம்பு பகுதியில் அரிப்பு, செதில் அல்லது வெடிப்பது போன்று இருப்பது Eczema எனும் அரிக்கும் தோலழற்சி ஆகும். இது சாதாரண சரும பிரச்சனை தான். ஆனால், இப்படி ஏற்படும் போது அதனை அரிக்க வேண்டாம், பரவ வாய்ப்புகள் இருக்கின்றன என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

முலைக்காம்பு வெளியேற்றம்
குழந்தை பெற்ற பெண்களுக்கு முலைக்காம்பில் திரவ வெளியேற்றம் ஆவது சாதாரணம் தான். ஆனால், இரத்தக்கறை போன்று வெளியேறுவது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது சிறந்தது.

முலைக்காம்பு புண்கள்
முலைக்காம்பு புண்கள், 90% பெண்கள் இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பருவம் அடைந்த போதும், மாதவிடாய் நிற்கும் தருவாயிலும் இதுப் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒருவேளை, மிகவும் சிவந்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

முலைக்காம்பு பிரச்சனை அறிகுறிகள்:
முலைக்காம்பு சிவந்து காணப்படுதல், மார்பகம் சிவந்து இருப்பது அரிப்பு, புண், கட்டி தோன்றுவது நிறம் மாறி காணப்படுவது, போன்ற அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *