எலும்பு பலத்திற்கு முருங்கை கீரை

 

8f0d7a55-48dc-4080-8fd0-c4a5fd7abcd7_S_secvpf

ஊட்டச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, சுவாசப் பாதை, தோல், ஜீரண மண்டலம் சார்ந்த தொற்று நோய்கள் உருவாகின்றன. பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டால் பூப்பெய்தல் தள்ளிப்போகும்.

மாதவிடாய் சிக்கல் தோன்றும். அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்படும். இந்த நிலையில் கர்ப்பம் தரித்தால் தாய், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தையையே பெற்றெடுப்பார். ரத்தசோகையை தவிர்க்க விரும்புகிறவர்கள், முருங்கை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

* முருங்கை இலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது தெளிவான கண்பார்வை, தோல் பராமரிப்புக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எளிதில் தொற்றும் சளி, காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும். சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்டது.

* இந்த கீரையில் இருக்கும் கால்சியம் வலுவான பற்கள், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. புரதம் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணைபுரிகிறது


* ரத்தத்தின் ஹீமோக்ளோபினை அதிகரிக்கும் இரும்புச்சத்து பெருமளவில் முருங்கை கீரையில் உள்ளது. இது ரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது. உடலுக்கு மிக அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் முருங்கையில் இருக்கிறது. புற்றுநோய் உள்பட உடலில் ஏற்படும் ஏராளமான நோய்களை தடுக்கும் ஆற்றல் இதில் இருக்கிறது.

* ரத்த சோகையால் உடலில் ஏற்படும் மந்தம், தளர்ச்சி, முடி உதிர்தல் போன்றவைகளை முருங்கை இலை உணவுகள் நீக்குகிறது. உடற்சூடு தணியவும், கண் நோய் தீரவும், தாய்ப்பால் பெருகவும் உதவுகிறது. பிரசவித்த பெண்களுக்கு முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி, எள்ளுப்புண்ணாக்கைத் தூவிக் கொடுத்து புத்துணர்ச்சி ஊட்டுவார்கள்.

* முருங்கைப் பூவை வெயிலில் உலரவைத்து தூளாக்கி, பசும் பாலில் சேர்த்து காய்ச்சி அருந்தினால், கண்களில் ஈரப்பதம் மிகுந்து, குளிர்ச்சி அதிகரிக்கும். பார்வை கூர்மையாகும். குழந்தைகளுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும்.

* ஆண்மை அதிகரிப்பு, விந்து கெட்டிப்படுத்தும் திறன் ஆகியவற்றுக்கு முருங்கைக்காய் அல்லது முருங்கை பூவை சூப் செய்து பருகலாம். காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப் புண் போன்றவைகளுக்கும் சிறந்த நிவாரணி. சிறுநீர் பெருக்கும் தன்மை முருங்கைக் காய்க்கு உள்ளதால், வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்தம் மற்றும் சிறுநீர் மண்டல செயல்பாடு மேம்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *