உடல்பருமன், டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோக்கோ

cocoa tree

பொதுவாக சாக்லேட்டுகளில் வாசனை மற்றும் ருசி கூட்டுவதற்காக கோக்கோ என்னும் மூலப்பொருள் சேர்க்கப்படும். இது ஒருவரின் அதிகப்படியான உடல் எடையைக் குறைத்து அவரது ரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில் தங்களின் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.


கோக்கோவில் காணப்படும் ஆண்டிஆக்சிடன்ட் பொருளான ஒலிகோமெரிக் புரோசயனிடினை உணவுடன் கலந்து ஆய்வுக்கூடத்தில் உள்ள பரிசோதனை எலிகளுக்கு அளித்ததில் அவற்றின் உடல் எடை குறைந்தது தெரியவந்ததுடன் அவற்றின் ரத்தத்தில் குளுகோஸ் சகிப்புத்தன்மை நிலையும் மேம்பட்டுக் காணப்பட்டது. இந்த நிலையே டைப்-2 நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
http://3.bp.blogspot.com/-ulNqkdRoslI/To68-doqiYI/AAAAAAAANuE/Gy7nZlSz6PY/s640/Best-top-desktop-chocolate-wallpapers-hd-chocolate-wallpaper-picture-food-image-photo-8.jpg
எனவே, ஆய்வாளர்கள் கோக்கோவின் சுவைமிகுந்த இந்த மூலப்பொருள் எடைகுறைத்தல் மற்றும் நீரிழிவு நோய் தடுத்தல் ஆகிய இரண்டு செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சாக்லேட்டுகள் குறித்த முந்திய ஆய்வுகள் மேம்படுத்தப்பட்ட சிந்தனை, பசி குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற சுகாதார நலன்களைத் தெரிவித்திருந்தன. இந்த ஆய்வறிக்கை அமெரிக்கா கெமிகல் சொசைட்டியின் விவசாய மற்றும் உணவு இரசாயனவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *