40 வயதில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

sep-12-lady-various

நீங்கள் 40 வயதை தொட்டுவிட்டீர்களா?

ஜாக்கிரதையா இருங்க…

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

இதோ சில மந்திரங்கள்:

உடற்பயிற்சி:

ஒரு நாளைக்கு அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரையாவது  கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும். நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டு….இவை ஏதாவது ஒன்றில் ஈடுபடவேண்டும்.


இவை உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

வைட்டமின் உணவு:


வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கிய உணவையே சாப்பிடுங்கள். நம் உடலுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து போன்றவற்றோடு வைட்டமின்களும் தேவை. இவை ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.
உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், நமது உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

நார்சத்து உணவு:

உங்களது அன்றாட உணவில் நார்ச்சத்து உணவு கட்டாயம் இருக்க வேண்டும். இதன் மூலம் இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து 14  சதவீதம் குறைகிறது. மேலும், இருதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 25 சதவீதம் வரை குறைகிறது.

மூளைக்கு பயிற்சி:

உடற் பயிற்சியை போன்று மூளைக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும்.
புத்தகம் வாசித்தல், செஸ் விளையாடுதல், குறுக்கெழுத்துக்கான விடை காண்பது போன்ற வழிகளில் மூளைக்கு பயிற்சி கொடுக்கலாம்.
ஏதாவது ஒரு இசையை கூட கற்றுக் கொள்ளலாம்.

இத்தகைய பயிற்சிகள் உங்களது மூளையை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு, முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி போன்றவற்றை தடுக்கிறது.

தூக்கம்:

நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம்தான் நமது உடல் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. நீங்கள் சரி வர தூங்காவிட்டால் உங்களது உடல் பழைய நிலைக்கு திரும்ப போதுமான கால அவகாசம் கிடைக்காது.
எனவே தூக்கம் கட்டாயம் வேண்டும்.

நீங்கள் 40 வயதில் ஆரோக்கியமாக இருப்பதோ அல்லது உடல் உபாதைகளுடன் இருப்பதோ, உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் டாக்டர்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *