கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா?

nuts


சிலருக்கு நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுகிறது.

சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.


ஆனால், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால். கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்று வேறு சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Originally posted 2015-01-16 08:06:10. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *