மஞ்சளின் மகிமை

download

மஞ்சள், முக்கியமான இயற்கை மருந்து. காயம், தீக்காயம், ரத்த காயம், சிராப்புகள் போன்றவற்றுக்கு மஞ்சள் பொடியை தண்ணீரில் குழைத்து காயத்தின் மேல் தடவ  வேண்டும்.

மஞ்சள் ஆன்டிசெப்டிக் என்பதால், காயம்பட்ட இடத்தில் சீழ் கோர்த்து கொள்ளாமல் இருக்கும். எலும்பு வலி அல்லது தவறி விழுந்து அடிப்பட்டதால் ஏற்படும் வலிக்கு, மஞ்சளை சுடு நீரில் கலந்து பத்து போடலாம்.

இரவில் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் கரகரப்பு போய்விடும். மார்சளி வெளியே வந்துவிடும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு பாலில் மஞ்ச தூள் கலந்து கொடுத்து வர,  புண் ஆறும். வயிறு சுருங்கும். டான்சில் தொல்லை இருப்பவர்களுக்கு மஞ்சள் பொடியை குழைத்து பத்து போடுவதும், மிதமான வெந்நீரில் வாயை கொப்பளிப்பதும் நல்லது.

‘நிசா அமலாக்கி’ என்ற ஆயுர் வேத மருந்து சர்க்கரை வியாதிக்கு அருமருந்து. மஞ்சள் மற்றும் நெல்லி பொடி தான் நிசா அமலாக்கி மருந்து.

மஞ்சள் ரத்தத்தை தூய்மையாக்கும். மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து முகத்தில் பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து குளிரிந்த நீரால் கழுவுங்கள். 2 வாரங்களில் முகம் மின்னும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *