ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு ‘டாட்டா’

download (1)

நம் உடலில் முக்கிய உறுப்பான இதயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதற்காக பலவித சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருக்கின்றன.

இதயத்தில் அடைப்பு இருந்தால், ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ முறையில் அந்த அடைப்பை டாக்டர்கள் நீக்கிவிடுகிறார்கள்.

ஆனால், இதயத்தின் வால்வுகள் பழுதடைந்தால், அந்த வால்வுகளை மாற்ற  ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.

**இதய வால்வு**

லட்சக்கணக்கானோருக்கு இதய வால்வுகள் சரியாக இருப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெறுகிறது. இந்தியாவிலும் கணிசமானவர்களுக்கு இந்த சர்ஜரி நடக்கிறது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய வால்வில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. வால்வு மாற்று அறுவை சிகிச்சை இன்றி இவர்களில் பாதிபேர் மரணமடைகின்றனர்.

**மருத்துவ புரட்சி**

இப்போது மருத்துவதுறையில் நிகழ்ந்துள்ள புரட்சியால், பழுதடைந்த இதய வால்வுகளை மாற்ற, நெஞ்செலும்பு வழியாக கத்தியை வைத்து அறுத்து மார்பை திறந்து செய்யும் ஓபன் ஹார்ட் சர்ஜரி தேவையில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

ரத்தக்குழாகளுக்குள் டியூப்கள் வழியாக சிறுசிறு உபகரணங்களை செலுத்தி இதய வால்வுகள் மாற்றலாம் என்கிறார்கள்.

புதிய உபகரணங்களைக் கொண்டு கதீட்டர் மூலம் வால்வு மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய வால்வு, கத்தியின்றி ரத்தமின்றி மாற்றப்பட்டுள்ளது.

**ஹை பிரஷர் – சரி செய்ய முடியுமா? **

முன்பு, சிக்கலில்லாத இருதய ரத்த நாளங்களில் அடைப்புப் பிரச்சனை இருதய துடிப்பு பிரச்சனைகள் மட்டும் இம்மாதிரி சிகிச்சை செயப்பட்டு வந்தது.

ஆனால், சில நோயாளிகளுக்கு இதய வால்வு பிரச்சனையையே இத்தகைய முறை கொண்டு தீர்த்து வருகின்றனர். இதயத்தில் ஓட்டையை கூட இது போன்ற சிகிச்சை மூலம் சரி செயப்பட்டு வரப்படுகிறதாம்!

தற்போது, இந்த புதிய முறைப்படி உயர் ரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்களாம்.

இந்த சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் நோயாளிகள் வீட்டிற்கு சென்று விடுகின்றனராம். 90 வயது நோயாளிகளுக்கு கூட இந்த முறையின் மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு ‘டாட்டா’ சோல்லும் இந்த சிகிச்சைக்கு  எவ்வளவு செலவாகும் என்று சொல்லவில்லை. ‘ரிஸ்க்’ என்னன்ன என்பதும் முழுதும் வெளிவரவில்லை. ஆனாலும், மருத்துவ உலகில் இது நிச்சயம் ஒரு புரட்சிதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *