துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே.

ஆயினும், துணியாலான சோஃபாக்களில் கிடைக்கக்கூடிய கதகதப்பு, அவற்றில் காணப்படும் விதவிதமான ரகங்கள் மற்றும் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதி போன்ற அம்சங்கள் துணிப் பிரியர்களின் மனதை வெகுவாக கவர்கின்றன.

கிங் ஃபர்னிச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த உள்நாட்டு நாகரீக கலாச்சார நிபுணரான ட்ரையானா ஓடோன் கூறுகையில், துணியாலான சோஃபாக்களின் தேர்வு பெரும்பாலும் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவர்தம் வாழ்க்கை முறையைப் பொறுத்தே அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோஃபாவிற்கு ஏற்ற துணியை தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை, அதன் பராமரிப்பிலும் காட்ட வேண்டியது அவசியம். சோஃபாக்களை பராமரிப்பதற்கான எளிய முறைகள்:

துணியாலான சோஃபாக்களை சீரான இடைவெளிகளில் அப்ஹோல்ஸ்டரி இணைப்புடன் கூடிய குறைவான உறிஞ்சியை உபயோகித்து வாக்யூம் க்ளீனரினால் சுத்தப்படுத்த வேண்டும்.
சோஃபாவில் தேன் சிந்தி விட்டாலோ அல்லது கறை பட்டு விட்டாலோ, அதனை உடனே துடைத்து விடுங்கள். ஏனெனில் இவ்வாறு படியும் கறைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், அவற்றை அகற்றுவது மிகவும் கடினம்.

சாதாரண வீட்டு சுத்திகரிப்பு திரவங்கள் துணிகளை சேதப்படுத்தவோ அல்லது துணியை சாயம் போகவோ செய்துவிடும். அதனால், கறைகள் மற்றும் படிமங்களை அகற்றுவதற்கு கிங்-கேர் ஃபேப்ரிக் க்ளீனரை பயன்படுத்துங்கள். சோஃபா துணியில் காணப்படும் தகுந்த பராமரிப்பு முறைக்கான லேபிளை பார்க்கத் தவறாதீர்கள்.

துணியை இழுத்தோ அல்லது கிழித்தோ சேதமாக்கி விடக்கூடிய வெல்க்ரோ மற்றும் வளையங்கள், பக்கிள்கள் போன்ற கூர்மையான பொருட்கள் சோஃபாவின் மீது படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அழுக்கு மற்றும் லூசாக இருக்கக்கூடிய நூலை அகற்றும் பொருட்டு, அடிக்கடி வாக்யூம் க்ளீனரை உபயோகிப்பதனால் வரக்கூடிய பில்லிங்கை தவிர்க்கப் பாருங்கள். அப்படியே பில்லிங் நேரும் பட்சத்தில், அனைத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கக்கூடிய ஃபேப்ரிக் பில் ரிமூவர் உபயோகிப்பது, துணிக்கு பாதுகாப்பானது.

துணியை வெளுக்க வைத்து, அதன் நூல்களை வலுவிழக்கச் செய்யக்கூடியதான நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து சோஃபாவை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

திரவம் ஏதேனும் மேற்புறத்தில் சிந்தினாலும், அது பரவாமல் உறிஞ்ச வழி வகை செய்து, துணியின் ஆயுளை நீட்டிக்கும் வகையில், சோஃபாவின் உருவாக்கத்தின் போதே அதன் துணியை பாதுகாக்க மெனக்கிடுங்கள்.

சோஃபாவை நன்கு பராமரிக்க வேண்டுமெனில், வருடத்திற்கு ஒரு முறை அப்ஹோல்ஸ்ட்ரி க்ளீனர் ஒருவரைக் கொண்டு தொழில்முறையிலான சுத்திகரிப்பை மேற்கொள்வது அவசியம்.

Originally posted 2015-12-17 16:23:23. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *