பயனுள்ள மூலிகை மருத்துவ குறிப்புகள்

* ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

*மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

*அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.

*அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

*தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

*மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

*காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

*அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

* மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

*குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

Originally posted 2015-12-17 08:40:39. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *