தேங்காயின் மருத்துவ பலன்கள் சில..!

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது, இளநீர்.

அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும்.

அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.

புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது.

தேங்காய் எண்ணை உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான்.

தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர் கோளாறுகளுக்கும் எலும்புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *