ஓட்ஸ் – பன்னீர் பேஸ் மாஸ்க்

30 வயதை கடந்த பெண்கள் இந்த பேஷ் மாஸ்க்கை போட்டு கொண்டு வந்தால் வயோதிகத்தை தவிர்க்கலாம். ஒரு சிலர் இளம் வயதிலேயே பார்க்க வயதானவர்கள் போல் தெரிவார்கள். அவர்களும் இதை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் :

ஓட்மீல் (Oatmeal) – 2 tbsp
பன்னீர் – 2 tbsp
பால்-1/2 கப்

செய்முறை :

• பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும்.

• இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும்.

• 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.

இந்தப் மாஸ்க் போட்டு கொண்டே வந்தால் விரைவில் வயோதிகத் தன்மையைக் குறைவதை காணலாம். வாரம் இருமுறை இந்த மாஸ்க் போட்டால் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *