இன்ஹேலர் பயன்படுத்தலாமா?

குழந்தைக்கு மழைக்காலங்களில் வீசிங் பிரச்னை வரும்போது இன்ஹேலர்,
நெபுலைசர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இதனால் ஏதேனும்
பின்விளைவுகள் ஏற்படுமா?

ஐயம் தீர்க்கிறார் நுரையீரல் நோய் சிகிச்சை மருத்துவர் ஜெயராமன். “தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் மழை, குளிர்காலங்களிலும் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதோடு, ஆஸ்துமாவாலும் வீசிங் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதற்கு மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Inhaler), வாயினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Oral inhaler) மற்றும் நெபுலைசர் (Nebulizer) போன்றவற்றின் மூலம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை நுரையீரலில் நேரடியாகச் செயல்பட்டு மூச்சுக்குழாயில் ஏற்படும் வீக்கத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்துவதால், குழந்தைகள் சிரமமின்றி மூச்சுவிட முடியும்.

மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர், நெபுலைசர் போன்றவற்றால் எந்த பக்கவிளைவோ, பாதிப்போ ஏற்படாது. இவை குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானவை. மாறாக வாயில் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர்களிலும் (Oral inhalers), உள்ளே கொடுக்கும் மாத்திரைகளிலும் கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள் உள்ளன. இந்த ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பச்சிளம் குழந்தைகளுக்கும் (Infants), 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

இந்த மருந்துகள் அப்போதைக்கு குழந்தைகளை மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்திலிருந்து விடுவித்தாலும், எலும்புகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது. அவர்களின் வளர்ச்சி விகிதத்தையும் பாதித்து உயரத்தைக் குறைக்கிறது. வளரும் பருவத்தில் ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைவிடவும் உயரம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள்.

ஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால் இக்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். அடிக்கடி தொற்று நோய் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி ஓரல் இன்ஹேலர்ஸ், மாத்திரைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.” ஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால் இக்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *