கை மற்றும் மணிக்கட்டுப் பயிற்சி

கம்ப்யூட்டரில் அதிகநேரம் வேலை செய்பவர்களுக்கு கைவிரல்களுக்கு ஓய்வு தேவை. கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில மணி நேரங்களுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் விரல்களுக்கு நல்லது.

இந்த பயிற்சி வேலை செய்யும் இடத்திலேயே அமர்ந்து கொண்டு செய்யலாம். இதற்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது. கைகளை நேராக நீட்டி, சுவற்றைத் தொடுவதுபோல, உள்ளங்கையை வைக்க வேண்டும். கட்டைவிரல் வெளியில் இருக்கும்படி, விரல்களை மூடிக்கொள்ள வேண்டும்.

பிறகு, கை விரல்களைத் திறந்து, விரல்களை நன்கு விரித்து, மீண்டும் மூட வேண்டும். இப்போது, கை மணிக்கட்டை கடிகார திசையில் (Clock wise) மூன்றுமுறைகளும் எதிர் திசையில் (Anti-clockwise) ஐந்து முறைகளும் சுற்ற வேண்டும்.

கீ போர்டில் வேலை செய்த விரல்களுக்கு ஓய்வு கிடைக்கும். கைவிரல்களை மூடித் திறக்கும்போது, விரல்களுக்குத் தேவையான லூப்ரிகேஷன் (Lubrication) கிடைக்கிறது. உராய்வுத்தன்மை சீராகிறது. மணிக்கட்டின் மூட்டு்கள் வலுவாகும். தொடர்ந்து, கீ போர்டில் மணிக்கணக்கில் வேலை செய்யும் விரல்களுக்கு, ரத்த ஓட்டம் சீராகச் செல்லாது. கைகளைச் சுழற்றும்போது, விரல்களுக்குத் தேவையான ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *