சர்க்கரை அளவை குறைக்கும் கோவைக்காய்

தோல்நோய்களை குணமாக்க கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக அமைவதும், வாய் மற்றும் வயிற்று புண்களை ஆற்றும் தன்மை உடையதும், அலர்ஜியை போக்க கூடியதும், அரிப்பு, தடிப்பை சரிசெய்ய கூடியதுமான கோவைக்காய். கோவைக் கொடி சாலையோரத்தில் மரங்களில் படர்ந்து இருக்கும். வெள்ளரி இனத்தை சேர்ந்த இதன் கனிகள் சிவந்து இருக்கும்.

வெண்மையான பூக்களை கொண்டது. கோவைச் செடி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கோவைக்காயை உணவாக சாப்பிடுவதாலும், மேல்பூச்சாக பயன்படுத்துவதாலும் பல்வேறு நோய்கள் குணமாகிறது. தோல்நோயை போக்குகிறது. வியர்வையை பெருக்க கூடியதும், எரிச்சலை தணிக்கும் தன்மையை கொண்டது.

கோவை இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிக்களுக்கான மருந்து தயாரிக்கலாம். நீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் கோவை இலைகளை 10 நிமிடம் வரை ஊறவைத்து எடுக்கவும். இதை பசையாக்கி சாப்பிடலாம். 5 முதல் 10 இலைகள் வரை எடுத்துக்கொள்ளலாம். இது சர்க்கரையின் அளவை குறைக்கும்.

கோவை கொடியின் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, புண்கள், கேன்சரை குணப்படுத்தும். சொரி, சிரங்கு, குஷ்டம் போன்ற தோல் பிரச்னை உள்ளவர்கள் கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சரியாகும். கோவை பழத்தை பயன்படுத்தி அலர்ஜிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு வேளைக்கு 2 பழம் எடுத்துக்கொள்ளலாம். பழத்தை மசித்து, அதனுடன் உப்பு, கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டிய பின்னர் 50 மிலி அளவுக்கு பருகலாம். இது, அலர்ஜியினால் தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பசியின்மை, சுவையின்மை போக்கும். பசியை நன்றாக தூண்டும்.கோவைக்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

கோவைக்காயை மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டை புண் சரியாகும். பூக்களை பயன்படுத்தி தோல் வியாதிகள், புண்களை ஆற்றக் கூடிய மேல்பூச்சு தயாரிக்கலாம். 50 மிலி தேங்காய் எண்ணெயில், 30 பூக்கள் வரை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். பூக்கள் பொரிந்து மொறுமொறுவென்று வரும்போது எடுக்கவும். இந்த தைலத்தை பூசினால் தொழுநோய், தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு ஆகியவை குணமாகும்.

கோவைக்கொடி ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது. சொரியாசிஸ், தோல்நோய்களுக்கு உள் மருந்தாகவும், மேல்பூச்சாகவும் பயன்படுகிறது. இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. கோவைகொடியின் இலை, காய், பூக்கள் ஆகியவை சர்க்கரைக்கு மருந்தாகிறது. பச்சையாக சாப்பிடும்போது வாய், வயிற்றுபுண் சரியாகும். கோவைக்காயை வற்றலாக வைத்தும் சாப்பிடலாம். இது எளிதாக கிடைக்க கூடியது. கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *