அழகு குறிப்புகள்

* காய்ந்த கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சிறிது நேரம்

கொதிக்கவிட்டு பின்பு வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி கறுப்பாக வளரும்.

* வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் சூடு தணியும்.

* கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வேப்பிலை மூன்றையும் அரைத்து நிழலில் காய

வைத்து தேய்காய் எண்ணையில் போட்டு தலையில் தேய்த்து வந்தால் முடி

கொட்டாமல் இருக்கும்.

* தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் தலைமுடி பளிச்சென்று

மின்னும்.

* கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து

வந்தால் எண்ணை பிசுபிசுப்பு நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *