சர்க்கரை நோயில் இருந்து கால்களை பாதுகாப்போம்

சர்க்கரை நோயினால் கால் மற்றும் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனிதனை வாட்டி வதைத்து பெரும் பொருளாதார சிக்கலையும் உண்டு பண்ணுகிறது.

பாதங்களில் ஏற்படும் சிறிய காயங்கள், வெடிப்புகள், நகம் வெட்டும் போது ஏற்படும் காயங்கள், காலணிகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் வெரிகோஸ்வெயின் என்ற சுருள் நரம்பு பாதிப்பால் ஏற்படும் சிறிய புண்கள் ஆகியவை சீழ்பிடித்து சதை அழுகி கேங்ரேன் என்ற நிலைக்கு போய் கால்களையே இழக்க நேரிடுகிறது. பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப கட்டத்தில் மிக துல்லியமாக கண்டறியும், நவீன பரிசோதனை முறைகளும், உபகரணங்களும் தற்போது உபயோகத்தில் உள்ளன.

உதாரணமாக ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறியும் வாஸ்குலர் டாப்ளர் ஸ்டடி பாதங்களின் உணர்ச்சி நரம்புகளின் பாதிப்பை கண்டறியும். நியூரோபதி அனலைசர் பாதங்களில் ஏற்படும் அழுத்தத்தை கண்டறியும் புட் ஸ்கேனர் பரிசோதனை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. நாள்பட்ட ஆறாத புண்களை குணப்படுத்த புதிய மருந்துகளும் டிரசிங் சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோலஜன் டிரசிங் மெட்டிரீயல்ஸ் மற்றும் போம் ஸ்பாஞ்ச் டிரசிங் முதலியன பயன்படுத்தப்படுகிறது.

இவை அதிகபட்சமான நீரை உறிஞ்சி எடுப்பதோடு, அடிக்கடி கட்டுகளை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தை குறைத்து விரைவில் புண்களை குணப்படுத்துகிறது. எல்.இ.டி. லேசர் லைட் மற்றும் மின்காந்த சிகிச்சை (பி.இ.எம்.எப்.). புரையோடிப்போன புண்களில் நுண்கிருமிகளின் அளவை குறைக்க உதவுவதுடன் புண்கள் விரைவில் குணமாக தேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி புதிய ரத்தகுழாய்கள் உருவாக உதவுகிறது.

அத்துடன் நரம்பு பாதிப்பான கால்களில் தாங்கமுடியாத வேதனை, ஊசி குத்தும் உணர்வு, எரிச்சல் போன்றவற்றை மருந்துகள் எதுவும் இல்லாமல் குணப்படுத்த உதவுகிறது. வேக் தெரபி என்ற நவீன முறையானது கால்களை இழக்க நேரிடும் நிலையில் உள்ள ஆபத்தான புண்களில் உள்ள அதிகபடியான நீரையும், அழுத்தத்தையும் மிக விரைவாக குறைத்து கால்களை இழக்காமல் காப்பாற்றுகிறது.

ஸ்டெம் செல் தெரபி என்ற நவீன சிகிச்சை முறையானது வருடக்கணக்கில் குணமாகாத மற்றும் தீவிரமான புண்களை உடையவரின் புண்களில் ஆரோக்கியமான புதிய திசுக்கள் வளர உதவுகிறது. ஹைபர்பேரிக் ஆக்சிஜன் என்ற நவீன சிகிச்சை முறையும் மிக ஆபத்தான புண்களை குணப்படுத்த பயன்படுகிறது. கடந்த 10 வருடங்களாக எங்கள் மருத்துவமனையில் செய்யப்பட்டு வரும் இந்த நவீன பரிசோதனை முறைகளாலும் பல புதிய சிகிச்சை முறைகளாலும் ஆயிரக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் கால்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *