உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்

நமது உடலில் சுரக்கும் வியர்வையுடன் பாக்டீரியா சேரும் போது உண்டாகும் ஒரு வித மணமே துர்நாற்றமாக மாறுகிறது.
ஆண், பெண் இருவருக்கும் இளம் வயதில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும்.

தட்பவெட்ப நிலை மாற்றத்தால் நமது உடலில் இருக்கும் கிட்டத்தட்ட 30 – 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் இந்த வித வியர்வையை சுரங்கின்றன.

இந்த வியர்வை பிரச்சனை பலருக்கும் தலைவலியாய் இருக்கும். ஆனால் இதை எளிதாக போக்க முடியும்.

1) அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

2) வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

3) உடலில் அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

4) உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பின்னர் துவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும்.

5) நிறமும், மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

6) டீ ட்ரீ அல்லது லேவண்டர், இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம்.

7) பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும்.

8) குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என்று நிறைய கிடைக்கின்றன. நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். உங்கள் அழகும் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *