உடல் பருமன் ஆபத்தா? தொப்பை ஆபத்தா?

உடல்பருமனாக இருப்பதால் உடல்நலப்பிரச்சனைகள், இதய நோய்கள், டைப் 2 நீரிழிவுநோய் மற்றும் விரைவிலேயே மரணம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, உடல்பருமனைவிட தொப்பை இருப்பதே ஆபத்து என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் Third National Health and Nutrition Examination நடத்திய கணக்கெடுப்பில், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக 15,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, 18 முதல் 90 வயதுடைய நபர்கள் இதில் கலந்துகொண்டனர், இதில் உடல்பருமனாக உள்ளவர்களை விட, இயல்பான உடல் எடையுடன் மாபெரும் தொப்பை கொண்ட மனிதர்களே விரைவில் மரணம் அடைவதாக தெரியவந்துள்ளது.

இதுவரை தொப்பையின் காரணமாக 32,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு செல்கள் அதிகமாக இருந்தால், அவை இரத்த நாளங்கள மற்றும் உடல் உறுப்புகளோடு பயணித்து உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

முறையான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளை எடுத்துக்கொண்டால் தொப்பை குறைத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *