ஆரோக்கிய கூந்தலுக்கு அருகம்புல் சாறு!

“சுருள் சுருளான தலைமுடியோட மினுமினுப்புக்குக் காரணம், தேங்காய் எண்ணெய், மிளகு, கத்தாழைச் சாறு, துளசி இதெல்லாம் கலந்த எண்ணெயை தினமும் தடவினா, முடி கருகருனு வளரும். கத்தாழை உடலுக்குக் குளிர்ச்சி தர்றதோட, நல்ல கண்டிஷனராவும் இருக்கும்.

தலையில பொடுகுத் தொல்லை. அருகம்புல்லை சாறு எடுத்து, அந்தச் சாறை தேங்காய் எண்ணெயோட கலந்து தலையில நல்லா ஊறவச்சு குளிச்சா, பொடுகு இருந்த இடம் தெரியாம போயிடும்.

வெயில்ல முகம், கை, கால்ல எல்லாம் கருமை படிஞ்சிடும். இதுக்கும் நான் ஒரு கை வைத்தியம் வச்சிருக்கேன்.

கொண்டைக் கடலையை மிஷின்ல கொடுத்து நைஸா அரைச்சுக்கணும். அந்தப் பொடியில கொஞ்சமா பால் கலந்து, பேஸ்ட் மாதிரி குழைச்சு, அப்படி கறுப்பான இடத்துல எல்லாம் பூசணும். இதைத் தொடர்ந்து செஞ்சிட்டு வந்தா, தோல் பளபளனு ஆகிடும். வெயில் காலத்துல சருமத்தைப் பாதுகாக்கறது இந்த பேஸ்ட்தான்.

சில சமயம் இந்த பேஸ்ட்டுக்கு பதிலா எலுமிச்சை சாறையும் தடவுவேன். எலுமிச்சை மட்டுமில்ல, புளிப்புத் தன்மையுள்ள எல்லா சாறும் வெயிலால ஏற்படுற சருமத்தோட கருமையை நீக்கிடும்.

எப்பவாவது முகம் ரொம்ப டல்லடிக்கிற மாதிரி தோணினா, உடனே கேரட்டை மிக்ஸியில நைஸா மசிச்சிடுவேன். இந்த பேஸ்ட்டை முகத்துல தடவி, கொஞ்ச நேரம் கழிச்சு அது காய்ஞ்சதும் கழுவிட்டா, முகம் பளபளனு டாலடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *