மன நோயை குணப்படுத்தும் மீனெண்ணெய் மாத்திரைகள்

மீன் எண்ணெய்யில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மன நோய்களுக்கு மருந்தாவதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மீனெண்ணெய் மாத்திரைகளை 12 வார காலத்திற்கு கொடுத்ததில் பெரும்பாலானவர்களுக்கு மனப் பாதிப்புகள் மற்றும் மன நோய்கள் தடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக மக்களிடையே பரவலாக மீனெண்ணெய் மாத்திரைகள் உண்ணப்பட்டு வருகின்றன.

இவற்றில் உள்ள ஆல்பா லீனோலிக் போன்ற அமிலங்கள் மனித உடம்பின் செல் சவ்வுகளில் காணப்படுகின்றன. இவை ஹோர்மோன்கள் சுரக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை வைத்தியத்திற்காக மீனெண்ணெய் மாத்திரைகளை தேர்வு செய்வது தெளிவாகியுள்ளது.

ஆண்டு தோறும் அமெரிக்கர்கள் 120 கோடி டாலர்களை செலவழிப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தெளிவாகிறது. அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் பால் ஆம்னிகர் இது சம்பந்தமாக ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.

இதில் 13 முதல் 25 வயதிற்குட்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். மொத்தம் 81 பேரில் 41 பேருக்கு மீனெண்ணெய்யும், மீதி 40 பேருக்கு சாதரண மன நல சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.

மீனெண்ணெய் கொடுக்கப்பட்ட 41 பேரில் 39 பேருக்கு மன ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சாதாரண சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 29 பேருக்கு மட்டுமே மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *