பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

பண்டிகை காலங்களில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, அவர்களின் பாராட்டைப் பெற வேண்டுமென்று பல பெண்கள் நினைப்பார்கள். அதிலும் அத்தை அல்லது மாமா பையன் இருந்தால், அப்போது செய்யும் மேக்கப்பிற்கு அளவே இருக்காது. ஆனால் அப்படி மேக்கப் போட்டு வீட்டில் உள்ளோரை பயமுறுத்துவதற்கு பதிலாக, முகத்தின் பொலிவை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டால், சருமம் பளிச்சென்று மின்னும்.

இங்கு சருமத்தின் நிறம் மற்றும் பொலிவை அதிகரிக்க உதவும் சில எளிமையான ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகம் அழகாக ஜொலிக்கும்.

பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

பாலில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பேக்

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து, அரைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமைகள் அகலும்.

வாழைப்பழ மாஸ்க்

ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும ஆரோக்கியமும் மேம்படும்.

ஆரஞ்சு தோல் மற்றும் சந்தனப் பொடி

ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கி, முகம் பளிச்சென்று மின்னும்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்

1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒன்றாக கலந்து, அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கும்.

பப்பாளி மற்றும் தேன் பேக்

பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, முகத்தை கழுவ, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *