கண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை!!

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் மொபைல், கூகுள் க்ளாஸ், அல்ட்ரா மாடர்ன் மடிக்கணினிகள் போன்ற நேற்றைய, இன்றைய, நாளைய எலெக்ட்ரானிக் உபகரணங்கள் அனைத்துமே நமது கண்களை தான் குறிவைத்து தாக்குகின்றன. இதை அறிந்தும் கூட நாம் இவற்றை தயங்காமல் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த எலெக்ட்ரானிக் உபகரணங்கள் மட்டுமின்றி நாம் செய்யும் அன்றாட சில பழக்கங்களும் கூட நமக்கே தெரியாமல் நமது கண்களை வலுவாக பாதிக்கின்றன. பெரும்பாலும் மக்கள் செய்யும் தவறு தாங்களே மருத்துவர் அவதாரம் எடுத்துக்கொள்வது தான். இதை தவிர்த்தாலே கண் மட்டுமின்றி எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு எளிதாக தீர்வுக் காணலாம்.

குறைந்த வெளிச்சத்தில் புத்தகம் படிப்பது
குறைந்த வெளிச்சத்தில் வேலை செய்வது அல்லது புத்தகம் படிப்பது கண்களுக்கு நிறைய அழுத்தத்தை உண்டாகும். இதனால், கண்ணெரிச்சல், கண் வலி போன்ற கண் சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

சூரியனை நேராக பார்ப்பது
புற ஊதா பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் சூரியனை நேருக்கு நேராக பார்ப்பதை தவிருங்கள். அதீத சக்தி கொண்ட சூரிய கதிர் வீச்சு விழித்திரையை வலுவாக பாதிக்கும்.

காண்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்குவது
மருத்துவர் பரிந்துரை செய்யாமல் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இரவு உறங்க வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது. ஏனெனில், நமது கண்களுக்கு இரவு உறங்கும் போது பிராணவாயு முக்கியமாக தேவைப்படுகிறது. இதை காண்டாக்ட் லென்ஸ் தடுக்கிறது.

காண்டாக்ட் லென்ஸ் அணிந்து நீச்சலடிப்பது
இறுக்கமான நீச்சல் கண்ணாடி அணியாமல் காண்டாக்ட் லென்ஸ் உடன் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டாம். நீரில் இனப்பெருக்கம் செய்யும் சில ஒட்டுண்ணிகள் காண்டாக்ட் லென்ஸை சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது இதனால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கண்களை தேய்ப்பது
சிலர் எப்போது பார்த்தாலும் கண்களை தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். மிகவும் அழுத்தமாக கண்களை தேய்த்துக் கொண்டே இருப்பதால் கண்ணிமைகளில் இருக்கும் இரத்த நாளங்களில் துண்டிப்பு ஏற்பட வாய்புகள் இருக்கின்றன.

கணினி
நீண்ட நேரம் இடைவிடாது கணினி, மொபைல் போன்றவற்றை உற்றுப் பார்த்தபடியே இருப்பது கண்ணில் எரிச்சல், வறட்சி ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.

கண்ட மருந்தை பயன்படுத்த வேண்டாம்
மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்களாக கண்ட மருந்தை பயன்படுத்தி கண்ணை துன்புறுத்த வேண்டாம். எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்துங்கள்.

மஸ்காரா
பெண்கள் அதிகமாக கண்ணுக்கு மஸ்காரா போடுவது கூட கண்ணனுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதே போல மூன்ற மாதத்திற்கு பழைய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.

மருத்துவரை அணுகுங்கள்
முதலில் எந்த குறைபாடு அல்லது பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவரை அணுகும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *