பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் உடல் உபாதைகள்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்களுடைய ஹார்மோன் சுற்று மாற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான உடற்கூறு மற்றும் உளவியல் மாற்றங்களுடன், பாலியல் ரீதியான பிரச்சனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் சில ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளன.

• பெண்கள் பருவமடையும் காலத்திலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அல்லது கர்ப்ப காலத்திலும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இந்த மார்பக காம்புகளைச் சுற்றி முடிகள் வளர்வது நடக்கக் கூடிய சாதாரண செயல்பாடு தான். சில நேரங்களில், இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome-PCOS) என்ற நோயின் நிலையை வெளிப்படுத்துவதாகவோ அல்லது கர்ப்பப் பையில் உள்ள கட்டிகளை வெளிப்படுத்துவதாகவோ கூட இருக்கலாம்.

எனவே, இந்நேரங்களில் மருத்துப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுப்போன்ற சீரியஸான விஷயங்கள் எதுவும் பரிசோதனையில் வெளிவராமல் இருந்தால், முடிகளை வெட்டவோ அல்லது பிடுங்கவோ செய்யலாம். மார்பக காம்புகள் இருக்கும் இடம் மிகவும் உணர்வு மிகுந்த இடமாக இருப்பதால், அங்கு வாக்ஸிங், ப்ளீச் அல்லது ஷேவ் செய்வதைத் தவிர்க்கவும். மாறாக, உங்களுடைய மருத்துவரைக் கலந்தாலோசித்து இந்த பிரச்சனையை சரி செய்யுங்கள்.

• அதிகமான இரத்தப்போக்கு அல்லது நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாதவிடாய் வருவதற்கு ஹைபர்மெனோர்ரியா என்று மருத்துவ ரீதியாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றானது. பொதுவாகவே நான்கேன்சரௌஸ் கட்டிகளால் ஏற்படக் கூடியதாகும். அதாவது கர்ப்பப்பை சுவர்களின் மீதாக வளரக் கூடிய பிப்ராய்டு என்ற கட்டிகள் தான் இந்த புற்றுநோயல்லாத கட்டிகளாகும். ஹார்மோன் பிரச்சனைகள், என்டோமெட்ரியோசிஸ் மற்றும் வேறு சில இரத்தம் உறையாத பிரச்சனைகளாலும் கூட அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படலாம்.

• பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் சொல்ல முடியாத மனஅழுத்தம் அவர்களுக்கு உள்ளது என்பது தான் உண்மை. இந்தியாவைப் பொறுத்த வரையில், இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது. இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி (Pelvic Floor Exercises) போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும். சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *