கொழுப்பு குறைய பூண்டின் பங்கு

பூண்டில் பல சத்துப்பொருட்கள் இருந்தாலும், அலிஸின்(Allicin)என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது. இது பாக்டீரியாக் கிருமி எதிர்ப்பு, வைரஸ் கிருமி எதிர்ப்பு. பூஞ்சை நோய்க் கிருமி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டதாகும்.

உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அழித்து வெளியேற்றும் சக்தியும் இந்த அலிஸினுக்கு உண்டு. பூண்டில் இயற்கையாகவே உள்ள அஜோன்(Ajoene) என்கிற ரசாயனப் பொருள், உடலில் ஏற்படும் சில தோல் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

பூண்டிலுள்ள அலிஸின் பொருள், நம் உடலுக்கு பலவகைகளில் உதவி புரிகிறது. உடலில் ரத்த அழுத்தம் (High Blood Pressure) அதிகமாவதற்கு ஆஞ்சியோடென்சின்_-2 என்கிற புரதப்பொருள் ஒரு காரணம். பூண்டிலுள்ள அலிஸின் ரத்த அழுத்தத்தைக் கூட்டும் ஆஞ்சியோடென்சின்-_2 என்கிற பொருளை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடும். இதனால் ரத்த அழுத்தம் சீராகிவிடும். இதுபோக, பூண்டிலுள்ள பாலி சல்பைடு என்கிற திடப்பொருள் நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களால், ஹைட்ரஜன் சல்பைடு என்கிற காற்றுப் பொருளாக மாற்றப்படுகிறது. கேஸ் (Gas) வடிவில் இருக்கும் இந்த ஹைட்ரஜன் சல்பைடு ரத்தக்குழாய்கள் விரிவடைய உதவி செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாய்களின் சுருங்கிவிரியும்தன்மை பாதிக்காது. இளம் வயதில் இருப்பதுபோல் அது முதுமையிலும் இருக்கும். பூண்டிலுள்ள கந்தகப்பொருள், ரத்தக்குழாய்கள் அடைபட்டுப்-போவதைத் தடுக்கிறது. அதோடு, ரத்தக்குழாய்கள் கடினமாவதையும் தடுக்கிறது. பூண்டிலுள்ள அஜோன் பொருள் ரத்தக் குழாய்களுக்குள் கொழுப்பு உருண்டைகள் உருவாவதைத் தடுக்கும். இதனால் ரத்தக் குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் ரத்த ஒட்டம் சீராக நடைபெறும். கொழுப்புசெல்கள் (Fat Cells) உடலில் உருவாவதையும், கொழுப்பு செல்கள் உடலின் எல்லா இடங்களிலும் படிவதையும், பூண்டிலுள்ள கந்தகப் பொருள் கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்து விடுவதைத்தான் நாம் அனிமியா என்று சொல்கிறோம். பூண்டிலுள்ள டை அலைல் சல்பைடு (Di Allyl Sulphide) என்கிற கந்தகப் பொருள் ரத்தம் அதிகமாக இரும்புச்சத்தை உறிஞ்சவும், தேவையானபோது போதுமான அளவை வெளிவிடவும் மிகவும் உப யோகமாக இருக்கிறது. பூண்டிலுள்ள கந்தகப் பொருள், மார்பகப் புற்று நோயை உருவாக்கும் விஷப்பொருட்களை, உட லுக்குள் பரவவிடாமல் தடுக்கவும் செய்கிறது. பூண்டிலுள்ள அலிஸின், கெட்ட கொழுப்புப் பொருட்களை ரத்தத்தில் அதிகமாக சேரவிடாமல் தடுக்கும். பூண்டிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், பொதுமக்கள் பூண்டை அதிகமாக விரும்புவதற்கு முதற்காரணம் பூண்டு ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைத்துவிடும் என்பது தான். இதற்காக பூண்டை சாப்பிட பலபேர் பலவிதமான யுத்திகளை கையாளு-கிறார்கள். ஒருவர் பூண்டுவை விறகு நெருப்பில் சுட்டு சாப்பிடுவார். இன்னொருவர் பாலில் போட்டு காய்ச்சி, வேகவைத்து சுவைப்பார். வெறும் தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. பச்சையாகவே மென்று தின்று விட்டு ஊதித்தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் அம்மியில் வைத்து அரைத்து, உணவோடு சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவிடுவார்கள். எப்படியாவது பூண்டு சாப்பிடுங்கள். ஏன் என்றால் அது உடலுக்கு நிறையவே. நல்லது செய்கிறது.

பூண்டிலிருக்கும் கிருமிநாசினி (Antiseptic) குணத்திற்காக 1858-_ஆம் ஆண்டிலேயே பிரபல விஞ்ஞான மேதை லூயி பாஸ்டர், பூண்டை உபயோகப்படுத்தச் சொல்லி பொது மக்களிடம் பிரபலப்படுத்தினார். சமைத்த வேகவைத்த சுட்ட பூண்டுவை நிறைய சாப்பிடுவதைவிட, பச்சையாக ஒன்றிரண்டு பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். பூண்டில் உடலுக்குத் தேவையான 17 அமினோ அமிலங்கள் இருக்கின்றன உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளைக் கட்டும்போது, அந்த கட்டுமானத் தொழிலாளர்களின் உடலுக்கு தெம்பும், உற்சாகமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய அன்றாட உணவில் பூண்டு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. வாயுத்தொல்லை தீர, கிருமிகளை விரட்ட, கெட்ட கொழுப்பைக் குறைக்க, ரத்தக்குழாய்களில் கொழுப்புதிட்டுத் திட்டாக படியாமல் இருக்க, ஜலதோஷத்தை விரட்ட புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்க, இருதயநோய் வராமலிருக்க, பல் வலியிலிருந்து , ஈ, எறும்பு, கொசு, மூட்டைப்பூச்சி முதலியவைகளை ஓட ஓட விரட்ட, பூண்டு ஒரு அற்புதமான உணவும், மருந்தும் ஆகும்.

Originally posted 2015-10-31 13:02:32. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *