சிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு வீட்டு வைத்தியம்

சிரங்கு ஒரு நாள்பட்ட தோல் வியாதி. இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும். இந்த நோய் மிகவும் இலகுவாக பரவக்கூடியது. அதிலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இத்தகைய நோயை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். இந்த பொருட்கள் அழற்சியை ஏற்பாடுத்துமா என சோதனை செய்ய காதின் பின்புறம் அல்லது முழங்கையில் தடவி அறிந்து கொள்ளலாம்.

• சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். இது தோலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றுகிறது.

• ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்பூரம் இரண்டையும் சேர்த்த கலவையை சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமடையும்.

• ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை இழையும் சேர்த்து அரைத்து, அதை இந்த சிரங்கின் மேல் தடவி வர விரைவாக குணமடையும்.

• ஒரு இரும்பு பாத்திரத்தில் 200 கிராம் கடுகு எண்ணெய் மற்றும் 50 கிராம் வேப்பிலையை சேர்த்து, அந்த இலை கருப்படையும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை குளிர வைத்து, தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவ குணமடையும்.

• பப்பாளி பழ விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை தடவ சிரங்கு புண்ணால் ஏற்படும் அரிப்பிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.

• புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாறை தடவலாம்.

• அதிக கெமிக்கல் பொருட்கள் இருக்கும் சோப்பை தவிர்ப்பது நல்லது.

• குளித்த பிறகு சிரங்கு புண் இருக்கும் இடத்தில் ஆலிவ் எண்ணெயை தடவ படிப்படியாக குணமடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *