வீராசனம்

வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம்.

செய்முறை….

முழங்கால் இட்டு அமர்ந்து கால் விரல்களை வெளிப்புறமாக நீட்டி வஜ்ஜிராசன நிலையில் அமரவேண்டும். இரண்டு குதி கால்களையும் புட்டப்பகுதிக்கு வெளிப்புறமாக ஒரு அடி அகலத்திற்கு நகர்த்தி புட்டம் குதிகாலின் மேல் அமராமல் குதிகால்களுக்கு அடையில் தரையில் படும்படி அமரவேண்டும்.

உள்ளங்கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்து சற்று நெஞ்சை நிமிர்த்திய நிலையில் மூச்சை உள்ளிழுத்து இரண்டு கைகளையும் கோர்த்தவாறு தலைக்கு மேலே உள்ளங்கை வானைப் பார்க்கும் வண்ணம் சுழற்றியவாறு கொண்டு வரவேண்டும். இதே நிலையில் ஒரு நிமிடம் நின்று இயல்பாக மு்ச்சுவிட்டவாறே ஆரம்ப நிலைக்கு வரவேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முறை செய்வது நல்லது. வீராசனம் செய்வதால் பாதத்தின் வளைவு குறைவதால் உண்டாகும் சப்பைக்கால் தொல்லை நீங்கும்.

குதிகால் எலும்பு வளர்ச்சி குறைவதுடன், தோள் பட்டை வலி, தொடை இறுக்கம் நீங்கும். தொடர்ந்து வீராசனம் செய்து வர மார்பு விரிவடைவதுடன் செய்யும் செயலில் ஈடுபாடும் வெற்றியும் கிட்டும். வீரனுக்கு மூகதேஜசும் நிமிர்ந்த மார்புமே அழகு. வெற்றி பெற்றவர்கள் இரண்டு கைகளையும் தூக்கி மகிழ்ச்சியாக செல்வதுண்டு. வீரனுக்கு உள்ள வசீகரத்தையும், மனம், உடல் பலத்தையும் தருவது இந்த ஆசனத்தின் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *