மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம் – A home remedy for joint pain

வயதாக ஆக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். அப்படி வயதான காலத்தில் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தான் மூட்டு வலி. வயது அதிகரிக்கும் போது, எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவு குறைந்து, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் வரும்.

ஆனால் தற்போது உட்கார்ந்து கொண்டே வேலைப் பார்ப்போருக்கும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. இப்படி அடிக்கடி மூட்டு வலி வந்தால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே தீர்வு காண வேண்டும்.

இல்லாவிட்டால், அது நாளடைவில் கடுமையான விளைவை ஏற்படுத்தும். அதற்காக உடனே மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட சொல்லவில்லை. நமது பாட்டி வைத்தியங்களில் ஒன்றான விளக்கெண்ணெய் கொண்டு சிகிச்சை அளித்துப் பாருங்களேன்…


நோயெதிர்ப்பு அழற்சி தன்மை
விளக்கெண்ணெயில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் உள்ளது. எனவே இதனைக் கொண்டு மூட்டுகளை மசாஜ் செய்து வந்தால், அவை மூட்டுகளில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் காயங்களை குணப்படுத்தும்.


நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
விளக்கெண்ணெயானது நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யுமாறு தூண்டும். இதனால் இந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளை மசாஜ் செய்தால், அவை உள்ளிழுக்கப்பட்டு தசை மற்றும் மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்திய கிருமிகளை எதிர்த்துப் போராட உடனடி தீர்வைத் தரும்.


மூட்டு வலி
மூட்டு வலி அதிகம் இருந்தால், விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை மூட்டுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அதிலும் இந்த முறையை இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், மூட்டு வலி பிரச்சனையே வராது.


கீல் வாதம்
இரவில் படுக்கும் போது விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, அதனை வலியுள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, பின் சுடுநீரில் நனைத்து துணியை பிழிந்து, அந்த துணியால் அவ்விடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், நாளடைவில் கீல்வாதம் குணமாகும்.

சரும பிரச்சனைகளுக்கு நல்லது
முகப்பருக்கள், மருக்கள் அல்லது ஏதேனும் ஈஸ்ட் தொற்றுகள் சருமத்தில் ஏற்பட்டிருந்தால், விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, சருமத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம். குறிப்பாக இந்த செயலால் சருமம் பொலிவாகும்.


மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருந்தால் உடனடி தீர்வு காண, 1/2 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1-2 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்தால், மலச்சிக்கல் உடனே நீங்கி, வயிற்றில் இத்தனை நாட்கள் தங்கியிருந்த கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

Originally posted 2015-10-29 19:08:07. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *