குழந்தைகளின் மன அழுத்தம்!!!

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல.

தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர்.

சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள்.

சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோபமாகவும் , ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள்.

சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

• குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள் பெற்றோருக்கிடையான வாக்குவாதங்கள்.

• பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைகளுக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

• குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுதல் மற்றும் அவர்கள் விரும்பாத இயலாத விடயங்களை அவர்களின் மீது திணித்தல்.

• நட்பில் உண்டாகும் மனவருத்தம்.

• குடும்பங்கள் பிரிந்து விடுதல்.

• மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு.

• பெரிதாக ஏற்படும் இழப்புகள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள் படங்கள்.

• அடிக்கடி ஏற்படும் உடல் நோய்கள்ää தொற்று நோய்கள்.

• குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்.

• மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்.

• பள்ளியில் அல்லது வெளி வட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்.

• பெற்றோரை பாதிக்கும் மன உணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

• உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் விளைவுகள்.

இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மன அழுத்த நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவர். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணரிபோய் விடுவார்கள். வெகு விரைவில் மன அழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேச விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் விரும்புகின்ற நண்பர் அல்லது உறவினர் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மன அழுத்த்ததை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு எற்படும்.

அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை அவையாவன:-

• அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாக கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவம் எளிது ஆனால் செயல்படுத்துவது கடினம்.

• அவர்கள் மனதில் இருப்பதை பேசிக்பொண்டிருக்கும் போது நடுவே குறுக்கிடுவது. எனக்கு அப்பவே தெரியும் என்பது. அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது. சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

• அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதியளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதை கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும்.

• குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப்புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ.எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்க்ககூடாது.

• ஆதரவு வார்த்தைகள். நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைச்சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

• நான் உன்னை ஒரு வாரமாக கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்ல வேண்டும்.உன் பிரச்சனைகளை எங்களிடம் சொல் நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று கனிவாக பேசுங்கள்,நம்பிக்கை கொடுங்கள்

Originally posted 2014-12-22 18:44:53. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *