பவழம் யார் அணியலாம் (coral)

* மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் *மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும்

* எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும்

*செவ்வாய் தசை அல்லது செவ்வாய் புக்தி நடபவர்கள் பவழம் அணியலாம்.இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும்.

அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும்.

பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது.ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.

வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.

பஞ்சலோகம் அல்லது வெள்ளி அல்லது செம்பு அல்லது தங்கதில் மோதிரமாக செய்து செவ்வாய் கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்.அணிய வேண்டிய விரல் – மோதிர விரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *