புற்றுநோய்க்கு இந்த காய்கறி எதிரி!

முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியான ப்ராக்கோலி அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதேபோல் அது நமக்கு அளிக்கும் நன்மைகளும் மிகவும் அதிகமாகும்.

கொலஸ்ட்ரால் குறைவு

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

செரிமானத்திற்கு நல்லது

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.

எலும்புகள் வலுவாகும்

பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே!

புற்றுநோய்க்கு எதிரி

ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

சர்க்கரை நோயை சீராக்கும்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

மன நலத்திற்கு

ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மன நலத்தை அதிகரிக்க உதவுகின்றன. ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

எரிச்சல்களை நீக்கும்

பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆகியவை தான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.

நரம்பு மண்டலத்திற்கு

பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *