மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் பல உடல்நல பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் தான் முதன்மையான காரணமாக உள்ளது. அத்தகைய மன அழுத்தமானது சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோருக்கு அதிகம் இருக்கும். இதற்கு வேலைப்பளு மற்றும் குறிப்பிட்ட காலத்தில் வேலை முடிக்க வேண்டிய கட்டாயம் போன்றவை காரணங்களாக உள்ளன.

ஒருவர் மன அழுத்தத்திற்கு உள்ளானால், அது அவரை மரணம் வரை கூட கொண்டு செல்லும். அந்த அளவில் மன அழுத்தம் மிகவும் மோசமான ஒன்று. இதற்கு அவ்வப்போது தீர்வு காணாவிட்டால், பெரும் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். மன அழுத்தத்தைப் போக்குவதற்கு அன்றாடம் யோகா, தியானம் போன்றவற்றை செய்வதோடு, ஒருசில உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே இங்கு மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தயிர்

தயிரில் உள்ள டைரோசைன் என்னும் பொருள், மூளையில் செரடோனின் அளவை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, அதில் உள்ள புரோட்டீன் மூளையில் உள்ள நியூரோ ஹார்மோனை அதிகரித்து, மன அழுத்தத்தை உருவாக்கும் நரம்புகளை அமைதியடையச் செய்யும். எனவே அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டார்க் சாக்லேட்

பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிட்டால், மன நிலை மேம்படும் என்று அனைவரும் அறிவோம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஓர் காரணம். எனவே தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை, மனதை அமைதியடையச் செய்யும். அதிலும் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே தினமும் ஒரு வேளையாவது பழங்களை தவறாமல் உட்கொண்டு வாருங்கள்.

பாதாம்

பாதாம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மன அழுத்தமும் குறையும். பாதாமி வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஜிங்க் வளமாக நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம், செரடோனின் உற்பத்திக்கு உதவி, மன நிலையை மேம்படுத்தும்.

மூலிகை தேநீர்

ப்ளாக் அல்லது மூலிகை தேநீரை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நரம்பு மண்டலத்தை அமைதியடைச் செய்து, மன அழுத்தத்தில் இருந்து விடுதலைத் தரும்.

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஏராளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் 12 அதிகம் உள்ளது. அதிலும் இதில் உள்ள பி12 வைட்டமின், செரடோனின் என்னும் கெமிக்கலை அதிகம் வெளியிட்டு, மன அழுத்தத்தல் இருந்து விடுதலைத் தரும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் பி வைட்டமின்களான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. ஃபோலிக் ஆசிட்டானது மன அழுத்தத்தைக் குறைப்பது, பதற்றத்தைக் குறைப்பது, நாள்பட்ட மற்றும் அடிக்கடி வரும் மன இறுக்கத்தில் இருந்து விடுதலைத் தரும். எனவே தவறாமல இதை அன்றாடம் சாப்பிடுங்க்ள.

பூண்டு

பூண்டு சாப்பிடுவதும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு பூண்டை பச்சையாக சாப்பிட்டாலும் சரி, ஊறுகாய் போன்று செய்து சுவைத்தாலும் சரி, அன்றாடம் தவறாமல் உட்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் டென்சன் குறைந்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *