பெண்களுக்கான வயாகரா “அந்த” விஷயத்திற்கு விமோசனம் தருமா???

ஆணும், பெண்ணும் சேரும் உறவு தான் எனினும் கூட, உடலுறவில் ஈடுபடும் போது இருபாலினரும் ஒரே திறன் கொண்டவர்கள் இல்லை. முக்கியமாக உச்சம் அடைவதில் இருவருக்கும் வெவ்வேறு நிலை உள்ளது. ஆகையால் தான் பெரும்பாலும் சில தம்பதிகள் உடலுறவில் திருப்தி அடைவதில்லை என கூறுகிறார்கள்.

ஆணுறையில் இருந்து வயாகரா வரை ஆண்களுக்கு மட்டுமே மாற்று உதவிகள் இருந்தனவே தவிர பெண்களுக்கு இல்லை. பெண்ணுறை புழக்கத்தில் இருந்தும் கூட பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. அதேப்போல தான் பெண்களுக்கான வயாகராவும். பல தடைகளுக்குப் பிறகு எப்.டி.ஏ ஒப்புதல் கொடுத்து விற்பனைக்கு வந்தது பெண்களுக்கான வயாகரா.

எனினும், இது அந்த விஷயத்திற்கு பெரிய அளவில் தீர்வு தருமா என பலருக்கு குழப்பம் இருக்கிறது…..

தகவல் 1

நீங்கள் சரியாக மற்றும் சீரான இடைவேளையில் உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும். இதுவும் பெண்களுக்கும் பொருந்தும். தனது துணைக்கு சிறந்த முறையில் திருப்தி ஏற்படுத்த முடியவில்லை என்பது தனிவகையில் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. இதை போக்க வயாகரா தீர்வளிக்கும்.

தகவல் 2

வயாகராவை ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது உட்கொள்ள வேண்டும். ஆனால், பெண்களுக்கான வயாகரா என அழைக்கபப்டும் flibanserin-சை படுக்கைக்கு செல்லும் முன்னர் தினமும் உட்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

தகவல் 3

வயாகரா உடலுறவில் ஈடுபடும் ஆண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சிறந்த முறையில் செயல்பட உதவுகிறது. ஆனால், flibanserin மூளையில் சுரக்கும் ஓர் கெமிக்கலை சுரக்க செய்து பெண்களை உச்சம் அடைய வைக்கிறது.

தகவல் 4

நரம்பியக்கடத்திகள் எனப்படும் " neurotransmitters" சீரின்மையை சரிசெய்து விருப்பத்தை மேலோங்க செய்கிறது.

தகவல் 5

இதற்கு முன் இரண்டு முறை பெண்களுக்கான வயாகரா எப்.டி.ஏ-வால் வர்த்தகத்திற்கு தடை செய்யப்பட்டது. மூன்றாவது முறை இப்போது தான் ஒப்புதல் வழங்கியது எப்.டி.ஏ

தகவல் 6

பெண்களுக்கான வயாகரா பயன்படுத்துவதால் குமட்டல், மயக்கம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுவே ஆல்கஹால் உடன் கலந்து பயன்படுத்தும் போது பெருமளவு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

தகவல் 7

உலகம் முழுக்க உள்ள பெண்ணியவாதிகள், பெண்களுக்கான இந்த வயாகராவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். ஆயினும் சிலர், இது பல பெண்களுக்கு உடலுறவு சார்ந்த விஷயத்தில் நன்மை விளைவிக்கிறது என இதை வரவேற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *