சர்க்கரை நோயை வலுவிழக்க செய்யும் மகாகனி!

இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். மனித உறுப்புக்களின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இறுதியில் மரணத்தில் தள்ளும் தன்மை கொண்டது இந்த நோய்.

* சித்த வைத்தியத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன. வெந்தயம், சுண்டை, பாகல், வேம்பு, நிலவேம்பு போன்ற பல மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை.

* இந்த வகையில், மகாகனி மூலிகையும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த பசுமை காடுகளில் இந்த அரிய மூலிகை காணப்படுகிறது.

* மிக, மிக கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்ட மகாகனியின் பட்டை, உலர்ந்த பழத்தோல் ஆகியவை “தேன்காய்’ என்ற பெயரில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படுகின்றன.

* இதிலுள்ள பேராக்மலின் லிமனாய்டுகள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. மகாகனியின் பட்டை, பழத்தோல் ஆகியவற்றை 10 கிராம் அளவில் எடுத்து, 500 மி.லி., நீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும்.

*அது, 125 மி.லி., அளவிற்கு சுண்டிய பின், தொடர்ந்து குடித்து வர சர்க்கரை அளவு குறையும். மகாகனி பட்டையை இடித்து, பொடித்து, சலித்து 500 மி.கி., அளவிற்கு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்போ, பின்போ சாப்பிட்டு நீர் அருந்தலாம்.

*  மருந்துகள் உட்கொள்ளும் போது சர்க்கரை அளவு மிக குறைந்து, குறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாகனி ஒரு மாமருந்து.

Originally posted 2014-12-20 03:25:39. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *