மரண பயம் ஏற்படும் போது, அதில் இருந்து வெளிவர செய்ய வேண்டியவை!!!

மரண பயம் சிலரது கண்களிலேயே காண முடியும் என்பார்கள். தொழில் நஷ்டம், படிப்பில் தோல்வி, கனவு தொலைந்துவிடுமோ என்ற அச்சம், நாம் விரும்பிய பெண் நம்மைவிட்டு சென்றுவிட்டால் என பல காரணங்களினால் மரணத்தை தேடி மனிதர்கள் செல்வதுண்டு.

இது மரணத்தின் மீதான பயம் என்றும் கூறலாம், வாழ்வின் மீது ஏற்பட்ட வெறுப்பு என்றும் கூறலாம். இது போன்ற எண்ணங்கள் தோன்றும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும் என்று பொதுவாக கூறுவார்கள். தைரியம் என்ற ஒன்றிருந்தால் மரணத்தை பற்றிஅவன் யோசிக்கவே மாட்டான்.

தைரியம், துணிச்சல், வீரம் என்று வாழ்ந்த பலரும் கூட தற்கொலை செய்துக்கொண்டது உண்டு. இதிலிருந்து வெளிவர சில வழிகள் உண்டு. அதை பற்றி தான் இனி நாம் காணவிருக்கிறோம்….

தனிமையை தவிர்க்க வேண்டும்

தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழும் போதே தனிமையில் இருப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் மன உளைச்சல் தான் உங்களை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டுகிறது. எனவே, இவ்வாறான எண்ணம் உங்களுக்கு தோன்றினாலும், அல்லது உங்களது நண்பருக்கு தோன்றினாலும் தனிமையை தவிர்த்துவிடுங்கள்.

ஓர் விஷயத்தில் சிந்தனையை குவிக்க தொடங்குங்கள்

மரணம் அல்லது தற்கொலையை என்னும் எண்ணத்தில் இருந்து விலகி, வேறு ஏதேனும் ஓர் விஷயத்தில் உங்கள் எண்ணத்தை குவிக்க ஆரம்பியுங்கள். இது, உங்கள் மனதை திசைத்திருப்பி, வேறு வழிக்கு கூட்டி செல்லும்.

உங்களை காயப்படுத்தியவரிடம் பேசுங்கள்

சில நேரங்களில் மரணிக்க எண்ணும் போது, நமக்கு பிடித்தவர்களுடன் கடைசியாக ஒருமுறை பேசிவிட்டு இறந்துவிடலாம் என எண்ணுவார்கள். ஆனால், நம்மை காயப்படுதியவர்களை எண்ணும் போது தான் நாம் சாதிக்க வேண்டும் என்ற ஓர் எழுச்சி வரும். எனவே, உங்களை காயப்படுதியவரிடம் பேசுங்கள். மரணம் துட்சமாகிவிடும்.

போன் கால்களை தவிர்க்க வேண்டாம்

ஓர் ஆய்வில் பெரும்பாலும் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அவர்களுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பேசுவதில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் நீங்கள் போன் கால்களை எடுத்து பேசினாலே, உங்கள் மனது வேறு விஷயத்தில் பயணிக்க தொடங்கி, மரணத்தை பற்றிய எண்ணத்தில் இருந்து விடுப்பட்டுவிடும் என்பது தான் உண்மை.

ஒரு லட்சம் பேர் தற்கொலை

நமது நாட்டில் 15-35 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாக இருப்பது தற்கொலை தான். ஒரு வருடத்தில், ஒரு இலட்சம் பேர் தற்கொலை செய்துக்கொண்டு மரணிக்கின்றனர்.

உங்கள் கனவுகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள்

ஒவ்வொருவருக்கும் ஓர் கனவு இருக்கும். அதற்காக நீங்கள் எடுத்த பெரும் முயற்சிகளை நினைத்து பார்க்க வேண்டும். அதை விட்டு மரணிக்க நினைப்பது பெரும் குற்றம். உங்களை விட்டு சென்றதை நினைத்து மரணிக்க நினைப்பதை விட, உங்களுக்காக இருப்பதை நினைத்து வாழ நினைப்பது தான் உத்தமம்.

மீண்டும் கிடைக்காது இந்த விலை மதிப்பற்ற பொருள்

மனித வாழ்க்கை என்னும் இந்த விலை மதிப்பற்ற பொருள், மீண்டும் உங்களுக்கு கிடைக்காது. எனவே, இதை சிறு சிறு பிரச்சனை, கோளாறுகளுக்காக, பாதியில் செயலிழக்க செய்வதை தவிர்த்து, சீரமைத்து உங்கள் வெற்றி பாதையை அடைய முயற்சி செய்யுங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *