உடல் பருமனை குறைக்கும் கொள்ளு சாதம்


தேவையான பொருட்கள்:

வேகவைத்த கொள்ளு – 1 கப்
வேகவைத்த சாதம் – 2 கப் (உதிரியாக)
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
கடுக்காய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு ? தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 1 கப்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:

• சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிவைக்கவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெட்டிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், பின் கொள்ளு, சுக்குப் பொடி, கடுக்காய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

• அதன்பின் வேகவைத்த சாதம் சேர்த்து, கிளறி ஒரு நிமிடம் மூடிவிடவும்.

• இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவவும். சூடாகப் பறிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *