கர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்


எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்று சொல்லக்கூடிய நோயானது கர்ப்பப்பையில் இருக்கிற திசுவானது வளர்ந்து, மற்ற இடங்களுக்குப் பரவி அங்கும் வளர்கின்ற ஒரு நிலை. இதனால் வலி, அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்துக்கு இடையிலான இடைவெளியில் மாதவிடாய் வருவது, கர்ப்பம் உண்டாவதில் சிக்கல் போன்றவை ஏற்படலாம்.

மாதந்தோறும் பெண்களுக்குச் சினைமுட்டையில் இருந்து ஹார்மோன்கள் வெளிப்படும். இதன் காரணமாகக் கர்ப்பப்பை வீக்கம் அடைந்து கனம் ஏற்படும். 28 நாட்களில் கர்ப்பப்பையானது இந்தத் திசுக்களை ரத்தத்துடன் சேர்த்துப் பிறப்புறுப்பு வழியாக மாதவிடாயை வெளிப்படுத்தும். Endometriosis என்னும் நோயில் இந்தத் திசுக்கள் கர்ப்பப்பைக்கு வெளியே மற்றப் பகுதிகளில் வளரும். இது சினைமுட்டையில் வளரலாம், ஆசனவாயிலோ அல்லது பெருங்குடலிலோ, சிறுநீர்ப் பையிலோ, இரைப்பையிலோகூட வளரலாம்.

சினைமுட்டையில் இருந்து ஹார்மோன்கள் உருவாகும்போது திசுக்களின் பிரதிபலிப்பு தெரியும். இங்கு ரத்தப்போக்கும் ஏற்படும். இதனால் அதிக ரத்தம் சேரும், வலி கடுமையாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் திசுக்கள் மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. அங்குச் சேர்ந்த திசுக்கள் வளரத் தொடங்குகின்றன.

குடும்பத்தில் தாய்க்கோ, சகோதரிக்கோ இந்நோய் இருந்தாலோ மிக இள வயதில் மாதவிடாய் தொடங்கினாலோ, குழந்தைப் பேறு இல்லாமல் போனாலோ, அடிக்கடி மாதவிடாய் வந்தாலோ, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு மாதவிடாய் தொடர்ந்தாலோ, ஹைமன் பகுதி மூடி இருந்தாலோ இந்நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் கடுமையான வலி, வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலி, மாதவிடாய் காலத்தில் வலி, மாதவிடாய்க்கு முன்பு வலி, ஒருவகையான தசைப்பிடித்தம், ஒரு வாரத்துக்கு முன்பே மாதவிடாய் வருவது, வலியுடன் கூடிய இல்வாழ்க்கை, மலம் வெளியேறுவதில் வலி, இடுப்புப் பகுதியில் வலி, முதுகு வலி போன்றவை காணப்படலாம்.

சிகிச்சை முறை :
இந்நோய்க்கு laparoscopy test, பெண்ணுறுப்பில் ultrasound test போன்றவற்றைப் பெண் மருத்துவர்கள் மேற்கொள்வது உண்டு. வயது, அறிகுறிகள், நோயின் தன்மை, குழந்தைப்பேறு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மருந்துகளைப் பரிந்துரை செய்வார்கள். உடற்பயிற்சி செய்தல், வயிற்றைத் தளரச் செய்யும் பயிற்சிகள், வலி நிவாரணிகள், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

Hormone therapy கர்ப்பத் தடையை ஏற்படுத்தும். கர்ப்பத்தைத் தடை செய்கிற மாத்திரைகளை ஒன்பது மாதம்வரை கொடுப்பார்கள். புரோஜெஸ்டிரோன் மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றைக் கொடுக்கிறபோது திசு வளர்ச்சி சுருங்கும். லேப்பராஸ்கோபி என்ற முறையில் நோயைக் கண்டுபிடிப்பார்கள். எங்கெல்லாம் திசு வளர்ந்துள்ளதோ அதை அகற்றுவார்கள்.

Laparotamy என்ற முறையில் சிறிது கிழித்துத் திசுக்களை அகற்றுவார்கள். தாய்மை அடைவதற்கு இதுபோன்ற சிகிச்சைகள் தேவைப்படலாம். மிகவும் முற்றிய நிலையில் கர்ப்பப்பையை எடுத்து மாற்றுவதும் உண்டு. ஆனால் குழந்தைப்பேறு வேண்டும் என்றால், இதைச் செய்யக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *