உடல் எடை குறைக்க குழந்தைகளோடு சேர்ந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!


பொதுவாகவே குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு உடல் எடை தானாக அதிகரித்துவிடும். ஒல்லியாக இருப்பவர்கள் கூட எடை அதிகமாகிவிடுவார்கள். இது, மிகவும் சாதாரணம். ஏறிய உடல் எடையை குழந்தையை வைத்தே குறைக்கக் முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம், குழந்தையோடு நீங்கள் சேர்ந்து செய்யும் சில உடற்பயிற்சிகள் உங்கள் உடல் எடை குறைய சீரான முறையில் உதவுமாம். இனி, அந்த பயிற்சிகள் பற்றி காணலாம்…

குந்துதல் பயிற்சி (Squats)

குந்துதல் பயிற்சி உங்கள் இடுப்பு, தொடை மற்றும் பின்னங்கால் பகுதிகளில் சதையை கரைக்க உதவும். மற்றும் இடுப்புக்கு கீழ் உடலை நன்கு வடிவாக அமைக்க உதவும். குழந்தை உங்கள் நெஞ்சை பார்த்திருப்பது போல பிடித்துக்கொள்ளவும். கையை முன் நீட்டியப்படி குழந்தையை பிடிக்க வேண்டியது அவசியம். தொடை நிலத்திற்கு சமமான நிலை நேராக இருக்கும் படி (Parallel) உட்கார்ந்து எழுந்திரிக்க வேண்டும்

நடைப்பயிற்சி

இது மிகவும் சுலபமான பயிற்சி ஆகும். குழந்தை ஈன்றெடுத்த புதிய தாய்மார்கள் அனைவரும் செய்ய வேண்டிய பயிற்சி. இது உங்கள் இதயம் மற்றும் நுரையீரலின் திறனை அதிகரிக்க உதவும். குழந்தையை கையில் ஏந்தியபடி தினமும் காலை, மாலை 20வது நிமிடம் நடைபயிற்சி செய்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். நடக்கும் போது மூச்சை நன்கு இழுத்து விடுவேண்டியது அவசியம். மிக வேகமாக நடப்பதை தவிர்த்திடுங்கள்.

குனிந்து எழும் பயிற்சி

ஒரு கையின் மூலம் குழந்தையின் பின் முதுகையும், மறு கையால் கழுத்தையும் பிடித்தவாறு இருக்க வேண்டும். பிறகு முதுகெலும்பு வளையாமல் முட்டி வரை குனிந்து எழுந்திரிக்க வேண்டும். குழந்தையை பத்திரமாக பிடித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாற்று புஷ்-அப் பயிற்சி (Modified Push-ups)

இந்த பயிற்சி உங்களது மார்பு பகுதியின் வலிமையை அதிகரிக்கவல்லது. குழந்தையின் வயிறு உங்கள் முதுகில் அமர்வது போல அமர்த்தி, மார்பும் கால்களும் நேர் கோட்டில் இருப்பது வைத்துக்கொள்ள வேண்டும். முட்டி தரையில் படும் படி வந்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கு எழுந்திரிக்க வேண்டும்.

வயிறு பகுதியில் வலி

ஒருவேளை பயிற்சியில் ஈடுபடும் போது வயிறு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே, பயிற்சியை கைவிட்டு ஓய்வெடுங்கள்.

எச்சரிக்கை

அனைவரும் இந்த பயிற்சிகளை செய்ய முடியாது. இதற்கு முன் உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குழந்தை பிறந்த புதிய தாய்மார்கள் பலருக்கு ஏதுனும் உடல்நிலையில் பிரச்சனை அல்லது வலு குறைவு இருக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் படி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *