இதய நோய் – Healthy Ways to stop heart blocking

இதய நோயைத் தடுக்கும் ஆரோக்கிய வழிகள்!!!

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிறைய பேருக்கு, இளம் வயதிலேயே இதய நோய் வந்துவிடுகிறது. இவற்றிற்கு காரணம், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான். அதுமட்டுமின்றி இதயமும் நன்கு சுத்தமாக இருக்க வேண்டும். இதய சுத்தம் என்றதும், உங்களது எண்ணங்களை சொல்லவில்லை. உண்ணும் உணவையும், நடைமுறைப் பழக்கவழக்கங்களும் தான்.

ஆம், சிலர் நவீன உலகம் என்ற காரணத்தினால், சிகரெட் குடிப்பது, வெளியே நண்பர்களுடன் சென்று பதப்படுத்தப்பட்ட மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உண்பது, அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் மற்றும் அதிக டென்சன் அடைவது என்று இருக்கின்றனர். இதனால் உடலில் உள்ள முக்கிய உறுப்பான இதயம் தான் பாதிக்கப்படுகிறது.

உடலில் உள்ள உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமான ஒன்று. அத்தகைய உறுப்பு சரிவர இயங்காமல், ஒருமுறை கடுமையாக பாதிக்கப்பட்டாலும், இறப்பு தான் நேரிடும். எனவே அத்தகைய இதயம் விரைவில் செயலிழக்காமல், ஆரோக்கியத்துடன் இருக்க, ஒருசில ஆரோக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியாக பின்பற்றினால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, நீண்ட நாட்கள் உயிர் வாழலாம். சரி, இப்போது அத்தகைய ஆரோக்கிய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

உடற்பயிற்சி 
குண்டாக இருக்கும் மக்களுக்கு தான் இதய நோய் விரைவில் வரும். எனவே அளவுக்கு அதிகமான எடை உள்ளவர்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புகைப்பிடித்தல் 
சிகரெட் பிடித்தால், நுரையீரலுக்கு மட்டும் ஆபத்தில்லை, இதயத்திற்கும் தான். தினமும் சிகரெட் பிடிப்பதால், இரத்த அழுத்தம் தான் அதிகரித்து, இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடிப்பவர்கள் உடனே நிறுத்தினால், வாழ்நாளை நீட்டிக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் 
இதய நோய் வருவதை தடுப்பதில், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது முதன்மையானவை. ஏனெனைல் அத்தகைய உணவுகளில் கொழுப்புகள் அதிகமாக இருப்பதோடு, உடலுக்கு தீங்கை விளைவிக்கும் ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

சரியான எடை 
நிறைய பேர் உடலுக்கு வேண்டிய எடை இல்லாமல், அளவுக்கு அதிகமாக இருக்கின்றனர். எனவே அத்தகையவர்கள், உடல் எடை சரியாக பராமரிக்க, கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து, சரியான டயட்டை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் உடலுக்கு ஏற்ற எடையை பெறலாம்.

சர்க்கரை 
இனிப்பு அதிகம் உள்ள உணவுகளை நிறுத்துவது என்பது சற்று கடினமானது தான். ஆனால் அவ்வாறு அதிகப்படியான இனிப்பை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு வருவதோடு, இதய நோயும் விரைவில் வந்துவிடும். எனவே டீ, காப்பி குடிக்கும் போது, சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக, சுகர்-ப்ரீ என்னும் சர்க்கரையைப் பயன்படுத்தினால் நல்லது.

பால் பொருட்கள் 
தினமும் பால் பொருட்களான தயிர் மற்றும் மோர் போன்றவற்றை குடித்து வந்தால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அந்த பொருட்கள் கொழுப்பு நீக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். மேலும் அளவாக பருக வேண்டும்.

சரியான மனநிலை 
இதய நோய் உண்டாவதற்கு மனதில் அதிகப்படியான குழப்பம், அழுத்தம், இறுக்கம் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இத்தகைய நிலைமை ஏற்பட்டால், உடலில் இரத்த சீராக ஓடாமல், இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அந்த நேரத்தில் தியானம் செய்து மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *