எதற்கெடுத்தாலும் பீதியடைபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்


எந்தநேரத்திலும் தம்மை சுதாகரித்துக்கொள்ள முடியாமல் பீதி அடைபவர்கள் மற்றும் பீதி அடையும் அளவிற்கு மற்றவர்களால் தாக்கப்படுபவர்களுக்கு பாரிய ஆபத்துக்கள் காத்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Gary Wittert என்பவரால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின் அடிப்படையிலேயே இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

இவர் பீதிக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது இவ்வாறானவர்கள் மாரடைப்பு, மற்றும் ஏனைய இருதய நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் பொஸ்டனிலுள்ள Massachusetts பொது வைத்தியசாலை ஆய்வாளர்கள் 2007 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பீதி அடைதலானது வயது முதிர்ந்த பெண்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது என கண்டுபிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *