பலரும் அறிந்த மருதாணியின் அறிந்திராத அற்புத குணங்கள்!!!

பெண்களை அலங்கரிக்க உதவும் அழகு பொருட்களில் ஒன்று தான் மருதாணி. இந்த மருதாணி பல விதவிதமான டிசைன்களை வைத்து கைகளை அழகுப்படுத்த மட்டுமின்றி, பல அழகு மற்றும் உடல் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது.

அதிலும் தழும்புகளை மறைக்க, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, பாதங்களில் வரும் ஆணி, நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

இப்போது இத்தகைய குணங்களைக் கொண்ட மருதாணியை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், எந்தெந்த பிரச்சனைகளைப் போக்கலாம் என்று பார்ப்போம்.

தழும்புகள்

தினமும் புடவையை கட்டி, இடுப்பில் கருமையான தழும்புகள் ஏற்பட்டிருக்கும். அத்தகைய தழும்புகளைப் போக்க மருதாணி, அருகம்புல் மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து, தடவி வர, இடுப்பில் இருக்கும் கருமையான தழும்புகள் மறையும்.

முடி உதிர்தல

் ஒவ்வொருவரும் முடி உதிர்தல் பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். இந்த பிரச்சனையை சரிசெய்ய, மருதாணிப் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு, வெயிலில் வைத்து நன்கு ஊற வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும்.

ஆரோக்கியமான நகங்கள்

அவ்வப்போது மருதாணியை கைகளுக்கு வைத்து வந்தால், நகங்களில் எந்த நோயும் வராமல் தடுக்கலாம். மேலும் கைகளுக்கு மருதாணி வைப்பதன் மூலம், உடல் வெப்பமும் தணியும்.

சேற்றுப்புண்

சிலருக்கு நீரில் அதிக நேரம் இருந்தால், சேற்றுப்புண் ஏற்படும். அத்தகைய சேற்றுப்புண்ணை சரிசெய்ய மருதாணியை இலையை, மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, இரவில் படுக்கும் போது பற்று போட்டு, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், சேற்றுப்புண் ஆறும்.

ஆணி போகும்

சிலருக்கு பாதங்களில் ஆணி வந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், மருதாணி இலையுடன், சிறிது வசம்பு, கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி இருக்கும் இடத்தில் வைத்து வர ஆணியை குணமாக்கலாம்.

தூக்கம்

தூக்கம் சரியாக இல்லாவிட்டால், முகம் பொலிவிழந்து காணப்படும். அப்படி தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், இரவில் படுக்கும் போது, மருதாணிப் பூக்களை தலையணையில் வைத்து தூங்கினால், நன்கு தூங்கலாம்.

அரிப்புகள்

உடலில் கடுமையான அரிப்புகள் ஏற்பட்டால், மருதாணி இலை சிறிது, மஞ்சள் சிறிது, மிளகு, பூண்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, ஒரு சிறு உருண்டையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பின் பால் குடிக்க வேண்டும். இப்படி 3-5 நாட்கள் சாப்பிட்டு வர அரிப்புகள் நீங்கும். குறிப்பாக, இப்படி செய்யும் போது, காரம், புளிப்பு கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் புகைப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *