மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் – brain damaging habits

உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அந்த பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் தீர்வுகளை சொன்னால், அந்த தீர்வுகள் அனைத்து பிரச்சனைகளுக்குமே சரியாக இருப்பதில்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனைகள் அனைத்து வருவதற்கு நமது பழக்கங்கள் தான் முக்கிய காரணம். அதற்காக இந்த பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க முடியாது தான். ஆனால் பழக்கமாக கொள்ளாமல் இருக்கலாமே!

ஏனெனில் பழக்கவழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், தூக்கமின்மை, மூளையில் பாதிப்பு போன்றவை ஏற்படும். நாம் ஏற்கனவே தூக்கமின்மையை ஏற்படுத்தும் பழக்கங்களை பார்த்துவிட்டோம். ஆனால் உடலில் உள்ள முக்கியமான பகுதியான மூளையையும் ஒருசில செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அத்தகைய மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் என்னவென்று பார்த்து, அந்த செயல்களை அடிக்கடி செய்வதை தவிர்த்து, மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாமே!!!

புகைப்பிடித்தல் 
புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும்.
உணவை தவிர்த்தல் 
சிலர் காலை வேளையில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு உணவுகளை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறையும். இதனால் மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும்.

அதிகமாக சாப்பிடுவது 
உணவுகள் உடலுக்கு எப்படி ஆரோக்கியத்தை தருமோ, அதே சமயம் தீங்கையும் விளைவிக்கும், அவை அனைத்தும் உணவை உண்ணும் அளவிலேயே உள்ளது. ஆம், உணவை அளவாக உண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால், பின் மூளைத் தமனிகளை கடினமடையச் செய்து, ஞாபக சக்தியை குறைத்துவிடும்.

அதிகப்படியான சர்க்கரை 
அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், பின் உடலில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும்.

காற்று மாசுபாடு 
உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது மூளை தான். ஆகவே மாசடைந்த காற்றை அதிகம் சுவாசித்தால், அது நேரடியாக இதயத்திற்கு செல்கிறதோ இல்லையோ அது மூளைக்கு தான் முதலில் செல்லும். இதனால் மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால், மூளையின் செயல்திறனானது குறைந்துவிடும்.

தூக்கமின்மை 
நல்ல தூக்கம் இல்லாவிட்டால், நாள் முழுவதும் ஓய்வின்றி செயல்படும் மூளையானது சோர்ந்து, போதிய ஓய்வில்லாததால் மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும் தூங்கும் போது முகத்தை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது. ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.

மோசமான நிலையிலும் 
வேலை உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்வது அல்லது படிப்பது போன்றவற்றை மேற்கொண்டால், மூளையின் திறன் குறைவதோடு, மூளையும் பாதிக்கப்படும்.

குறைவாக பேசுவது 
அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *