சர்க்கரை நோயாளிக்கான சரிவிகித உணவு முறை

*கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே சிறுநீரகப் பழுது ஏற்படுகிறது. தவறான உணவு முறையும் இதற்கு ஒரு காரணம். சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கும் சிறுநீரகம் செயல் இழக்கும் பிரச்னை எளிதில் தாக்கும்.

*சரிவிகித உணவு முறையை மேற்கொண்டாலே போதும். சிறுநீரக பழுதை தடுக்கலாம். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் புரதம் அதிகம் உள்ள பருப்பு, பயறு வகைகள், முழு தானியங்களான கோதுமை, ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

*தண்ணீர் கூட அதிகளவில் குடிக்கக் கூடாது. பழங்கள், கீரைகள் தவிர்க்கலாம். அரிசி உணவுகள், வெள்ளை ரவை மற்றும் சேமியா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது.

*முருங்கைக் காய், நீர்க்காய்களான புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் போன்றவையும் வேண்டாம். பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம், மாம்பழம், மாதுளை, இளநீர் ஆகியவற்றையும் தவிர்ப்பது முக்கியம்.

*அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் கோழிக்கறி மட்டும் வாரத்துக்கு 50 கிராம் எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் வாரத்துக்கு 3 முறை சாப்பிடலாம். உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது முக்கியம். பழங்களில் ஆப்பிள், பப்பாளி சாப்பிடலாம். கருப்பு திராட்சை 50 கிராம் மட்டும் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *